SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி உட்பட மூவரை 17ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவு

2018-09-15@ 01:41:42

விருதுநகர்: பாதுகாப்பு போலீசார் பற்றாக்குறையால், நிர்மலாதேவி உட்பட மூவரையும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தவில்லை. இவர்களை வரும் 17ம் தேதி ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைதாகி மதுரை சிறையில் உள்ளனர். இவர்கள் மூவரும் நீதிமன்ற காவல் முடிந்து, கடந்த 10ம் தேதி விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் (எண் 2) ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மூவருக்கும் செப். 14ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட்டார். இதன்படி மூவரையும் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்யவேண்டிய நிலையில், பாதுகாப்பிற்கு போலீசார் இல்லாததால், மூவரையும் ஆஜர்படுத்த முடியவில்லை என சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி திலகேஸ்வரி வரும் 17ம் தேதி மூவரையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்