SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தண்டவாள ஜல்லி கற்கள் : சிவப்பு துணி காட்டி ரயிலை நிறுத்திய பொது மக்கள்

2018-09-15@ 01:40:41

ஆத்தூர்: சமீபத்தில் பெய்த மழையில் ஜல்லி கற்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் திடீர் பள்ளம் உருவானது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் சிவப்பு துணி காட்டி சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரயிலை நிறுத்தினர். விருத்தாசலம்  - சேலம் பயணிகள் ரயில் நேற்று காலை 7.45 மணியளவில் ஆத்தூர் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. ஆத்தூர் காட்டுக்கோட்டை ஆளில்லா ரயில்வே கேட்டில், தரைப்பாலம் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அப்பகுதியில் நேற்று காலை, கிராம மக்கள் நடந்து சென்றனர். அப்போது, மழையின் காரணமாக தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் ஏற்பட்டிருந்த திடீர் பள்ளத்தை கண்டனர். அப்போது ரயில் வந்து கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள், தண்டவாளத்தில் நின்றபடி சிவப்பு துணிகளை காட்டி எச்சரிக்கை செய்தனர். இதைப்பார்த்த இன்ஜின் டிரைவர், உடனடியாக வேகத்தை குறைத்து ரயிலை நிறுத்தினார். சரியான நேரத்தில் மக்கள் ரயிலை நிறுத்தியதால்,பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவர்கள் மட்டும் சிவப்புக் கொடி காட்டி, ரயிலை நிறுத்தியிருக்காவிட்டால், ரயில் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்று பயணிகள் தெரிவித்தனர். ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் குழுவுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் மண் கொட்டி, பள்ளத்தை சரி செய்து தண்டவாளத்தை பலப்படுத்தினர். இதன் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து, விருத்தாசலம்-சேலம் பாசஞ்சர் ரயில் ஆத்தூரை நோக்கி சென்றது. வழக்கமாக சேலம் ரயில் நிலையத்திற்கு காலை 8.45 மணிக்கு வந்து சேர வேண்டிய ரயில், ஒரு மணி நேரம் தாமதமாக 9.45 மணிக்கு வந்து சேர்ந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்