SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குட்கா ஊழல் வழக்கு: மாதவராவ், சீனிவாசனுக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் நீட்டிப்பு

2018-09-14@ 17:55:37

சென்னை: குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ், சீனிவாசன் இருவருக்கும் மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2 பேரிடமும் விசாரணை நிறைவடையாததால் காவல் நீட்டிப்பு கோரி சிபிஐ மனு தாக்கல் செய்தது. இதனை அடுத்து இன்று முதல் மேலும் 3 நாட்கள் விசாரணை நடத்த சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாதவராவ் குடோனில் இருந்து குட்கா பாக்கெட் செய்யும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும் குட்கா, பான் மசாலா பேக்கிங் செய்யும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. சோதனை அனைத்தும் வீடியோவில் பதிவிடப்பட்டுள்ளது என்று சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னதாக குட்கா ஊழலில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உட்பட 5 பேரை 4 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர்,முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீடு, விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளர்,முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் வீடுகள் உள்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையை தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ்,உமாசங்கர் குப்தா,உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன்,கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் தரகர்கள் நந்தகுமார்,ராஜேஷ் ஆகிய 6 பேர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து,கைதான 5 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனு மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் குட்கா ஊழல் வழக்கில் கைதான 5 பேரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவடையாததால் மேலும் 3 நாள் சிபிஐ காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்