SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

2018-09-14@ 17:44:44

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் நிலவுவதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும் மற்ற இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என கூறப்படுகிது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் 10 செ.மீட்டரும், செஞ்சியில் 7 செ.மீட்டரும், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் தலா 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், சிவகங்கை, வேலூர் மாவட்டம் ஆலங்காயம், தஞ்சை அணைக்கட்டு, நாமக்கல் மற்றும் திருச்சி துவாக்குடியில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

  • thirupathisixbrammorcha

    திருப்பதியில் 6வது நாள் பிரம்மோற்சவம் கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்