SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை விமான நிலையத்தில் 5 பயணிகளிடம் இருந்து 17 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

2018-09-14@ 17:17:58

மதுரை: மதுரை விமான நிலையத்தில் 17 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இன்று காலை மதுரையிலிருந்து கொழும்புவிற்கு புறப்பட இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகள் குடியேற்ற சோதனை, உடைமைகள் சோதனை ஆகியவற்றை முடித்து பயணிகள் விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து , இந்த விமானத்தில் வெளிநாட்டு பணங்கள் கொண்டு செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் மதுரை சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விமானத்திற்குள் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, விமானத்தில் இருந்த திருநாவுக்கரசு, மணிவண்ணன், கரிகாலன், சையத் முகமது மற்றும் ஜவாங்கிர்  உள்ளிட்ட 5 பயணிகளின் உடைமைகளில் இருந்து 17,16,802 ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கைப்படறப்பட்டன. இந்த கரன்சி நோட்டுகள் அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்த் உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும் பணம் எனத் தெரியவந்துள்ளது.  மேலும் இது குறித்து அந்த 5 பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rivermoon

    வடகிழக்கு அமெரிக்காவில் நிலவின் மேற்பரப்பை போல உறைந்து காணப்படும் ஆற்றின் நடுப்பகுதி!

  • ParadeREhearsalRepublicDay

    டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையின் கண்கவர் புகைப்படங்கள்

  • alanganalloor_kaalaigal11

    வீரத்துடன் சீறி பாயும் காளைகள்.. மெர்சல் காட்டும் காளையர்கள்... உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா

  • NairobiHotelAttack

    மும்பை பாணியில் கென்யா ஓட்டலில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்: இதுவரை 21 பேர் உயிரிழப்பு!

  • 17-01-2019

    17-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்