SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுக்கோட்டை அருகே கல்குவாரியில் வெடி விபத்து: 3 பேர் படுகாயம், 2 பேர் உயிரிழப்பு

2018-09-14@ 16:21:49

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முத்துடையான்பட்டி கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். வாகைப்பாறையில் வசித்து வரும் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் இரண்டு தினங்களுக்கு முன்பு பாறைகளுக்கு வெடி வைத்திருக்கின்றனர். இந்த வெடிகள் அனைத்தும் வெடித்து விட்டதாக நினைத்து ஊழியர்கள் இன்று குவாரிக்குள் கற்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் எதிர்பாராத விதமாக வெடிக்காமல் இருந்த ஒரு வெடி வெடித்தது.

இதில் ஊழியர்கள் ஆறுமுகம், பழனிவேல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த மற்ற மூன்று தொழிலாளர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மகன் ஆறுமுகம் இறந்த செய்தியை கேட்டு அவரது தாயார் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்