SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்துக்கு நாள்தோறும் 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்கவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

2018-09-14@ 15:45:34

சென்னை: தமிழகத்துக்கு ஒரு நாளுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழக அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு குறைந்து விட்டது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பதாக பிரதமருக்கு முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் நிலக்கரி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுரங்கங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு குறைந்த அளவே நிலக்கரி அனுப்பப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். போதுமான நிலக்கரி கிடைக்காவிட்டால் அனல்மின்நிலையங்களை மூடும் நிலை ஏற்படும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார். காற்றாலையில் இருந்து கிடைக்கும் மின்சாரமும் நின்றுவிட்டதால் தமிழகத்துக்கு நெருக்கடி ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் நிலக்கரி அமைச்சகத்திற்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்