SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பூரில் தனியார் காட்டன் மில் மேற்பார்வையாளரை வடமாநிலத்தவர் அடித்துக் கொலை

2018-09-14@ 15:22:13

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காட்டன் மில் மேற்பார்வையாளரை வடமாநிலத்தவர் அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். கள்ளக்கிணறு பகுதியில் இயங்கி வரும் சுலோச்சனா காட்டன் மில்லில் 500 கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆலை வலாகத்துக்குள்ளேயே தங்கும் இடம் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்களில் சிலர் இரண்டுக் குழுக்களாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நீண்ட நாட்களாக இது தொடர்ந்து வந்த நிலையில் ஆலையின் மேற்பார்வையாளராகப் பணிப்புரியும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் இரவு அவர்களை சமாதானம் செய்ய சென்றுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்திற்குப் பிறகு தனியே நடந்து வந்தவரை மோதலில்  ஈடுபட்ட ஒரு தரப்பு அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பல்லடம் காவல் துறையினர் நாகராஜின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்