SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சியில் காவிரி கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை

2018-09-14@ 14:48:02

திருச்சி: காவிரி கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட கோரி காவிரி மேலாண்மை ஆணைய தமிழக உறுப்பினரை முற்றுகை இட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு 58 நாட்கள் ஆகியும் குள்ளம்பாடி, அய்யன், பெருவளை உள்ளிட்ட கிளை வாய்க்கால்களில் போதிய தண்ணீர் வராமல் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

கிளை வாய்க்கால்களில் போதிய தண்ணீர் திறக்காததைக் கண்டித்து திருச்சியில் உள்ள பொதுப்பணித் துறை தலமைப் பொறியாளர் அலுவலகத்துக்குள் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தலைமை பொறியாளரும் காவிரி மேலாண்மை ஆணையர் தமிழக உறுப்பினரும் ஆனா செந்தில் குமாரை அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் முற்றுகை  இட்டு  அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை முதல் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படும் என அவர் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்துச் சென்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்