SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை

2018-09-14@ 14:39:55

சென்னை: சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் இன்று இது தொடர்பாக மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்தது. அதில் 8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், 8 வழிச்சாலைக்கு வழித்தடங்கள் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் அதிருப்தி

மத்திய அரசின் பதில் மனுவில் முரண்பாடுகள் உள்ளதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 8 வழிச்சாலை அமைய உள்ள இடத்தில் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த அரசு மரம் வெட்டியதாக 5 அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தது. மேலும் அதில் 2 அரசு அதிகாரிகள் ஜாமினில் வெளிவந்துள்ளதாகவும் அரசு தெரிவித்தது. இதற்கு 2 அரசு அதிகாரிகளின் ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 5 பேரின் குற்றப்பின்னணி பற்றி அறிக்கை தரவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்லக்கூடிய வகையில் 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 வழி பசுமைச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலை முடிவு செய்தது. இந்த சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் 8 வழிச்சாலை திட்டத்தில் மாற்றம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. வனப்பகுதியில் 70 மீட்டர் அகலத்திற்கு செல்ல இருந்த சாலையை 50 மீட்டர் அகலமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்