SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னேற்றம் : இந்திய பங்கு சந்தையிலும் கிடு கிடு

2018-09-14@ 13:34:00

மும்பை: இந்திய பொருளாதார சரிவுக்கு இடையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. காலையில் வர்த்தகம் தொடங்கியதுமே ரூபாயின் மதிப்பு 49 காசுகள் உயர்ந்து ரூ.71.70 காசாக முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே  தட்டுத்தடுமாறி வரும் ரூபாய் மதிப்பு கடந்த செவ்வாய் கிழமையன்று வரலாறு காணாத வகையில் ரூ.72.79 காசுகளாக வீழ்ச்சியடைந்தது. இதனால் ஆசிய நாடுகளிலேயே மோசமான கரன்சியாக கூட இந்திய ரூபாய் மாறியது.

இந்த நிலையில் அதன் மதிப்பு உயர்ந்திருப்பது இந்திய பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 221 புள்ளிகள் உயர்வுடன் இன்றைய நாள் வணிகத்தை தொடங்கியது. தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் நிஃப்டி 73 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகத்தை தொடங்கியது. இதனிடையே நாட்டின் வரலாறு காணாத பொருளாதார சரிவு மற்றும் கட்டுக்கடங்காத பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி நாளை அலோசிக்க உள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்