SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவை நியமித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2018-09-14@ 12:19:36

சென்னை: திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவை நியமித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கட்சிப்பொறுப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 7ம் தேதி மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து, திமுகவின் தலைவர் பதவி காலியாக இருந்தது. தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்தத் தேர்தலில் வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யாத நிலையில், கட்சியின் பொதுக் குழுக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர். இதில் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அன்பழகன் அறிவித்தார். இந்நிலையில் துரைமுருகன் வகித்து வந்த முதன்மை செயலாளர் பதவி காலியாக இருந்தது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டி.ஆர்.பாலுவை முதன்மை செயலாளராக அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்