SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தீவிரம்

2018-09-14@ 11:10:27

களக்காடு: நெல்லை மாவட்டம், களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையில் 895 சதுர கி.மீ. பரப்பளவில் களக்காடு, முண்டந்துறை  புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம்  என்ற பெருமையை பெற்ற இந்த காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை,  கரடி, சிங்கவால் குரங்கு, செந்நாய்கள், நீலகிரி வரையாடு, கடமான் உள்ளிட்ட  அரியவகை விலங்கினங்கள் வசித்து வருகின்றன. இதேபோல் மூலிகைச் செடிகளும் உள்ளன. ஆண்டுதோறும் மலையில் வாழும் வனவிலங்குகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெறுவது  வழக்கம். இதன்படி நடப்பாண்டு பருவமழைக்கு முந்தைய கணக்கெடுப்பு பணி, கடந்த 11ம் தேதி துவங்கியது. இதையொட்டி கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும்  கல்லூரி மாணவர்கள், இயற்கை நல ஆர்வலர்கள் , வனத்துறையினருக்கு களக்காடு  தலையணையில் சிறப்பு பயிற்சி  அளிக்கப்பட்டது.

பின்னர் களக்காடு புலிகள் காப்பக கள  இயக்குநர் அன்வர்தீன் உத்தரவுப்படி துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர்  கணக்கெடுப்பைத் துவக்கிவைத்தார். முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் துணை இயக்குநர் பார்ககவே தேஜா, கணக்கெடுப்பு பணியை துவக்கினார்.களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட  அப்பர் கோதையாறு, களக்காடு, திருக்குறுங்குடி வன சரகங்களில் 21 இடங்களில் கணக்கெடுப்பு  பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் கல்லூரி மாணவர்கள்,  இயற்கை நல ஆர்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். அப்பர்கோதையாறு வனச்சரகத்தில் 5 குழுவினரும், களக்காடு, திருக்குறுங்குடி வனச்சரகங்களில் தலா 8 குழுவினரும் என மொத்தம் 21 குழுவினரும், முண்டந்துறை சரணாலயத்தில் உள்ள அம்பை, பாபநாசம், முண்டந்துறை, கடையம் சரகத்தில் உள்ள 29 பீட்களில் 125 பேரும் புலிகளை நேரில் காண்பது.

அவைகளின் கால்தடங்கள், எச்சங்களை சேகரிப்பது, மற்றும் அடையாளங்களை கண்டெடுத்தல் முறைகளில் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். வருகிற 17ம் தேதி மாலை வரை அவர்கள் அடர்ந்த வனப்பகுதியில் தங்கியிருந்து இப்பணியில் ஈடுபடுகின்றனர். முதல் 3 நாட்கள் புலி, சிறுத்தை மற்றும் பிற மாமிச  உண்ணிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நேற்று முதல் குளம்பினங்களின் நடமாட்டம் குறித்து, கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். நாளை மறுதினம் (16ம் தேதி) சேகரித்த புள்ளிவிபரங்களை அறிக்கையாக தயார் செய்கின்றனர்.மறுநாள் (17ம் தேதி) அறிக்கைகளையும், சேகரிக்கப்பட்ட  வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்களை அதிகாரிகளிடம் சமர்பிக்கின்றனர். கணக்கெடுப்பு பணிகளை வனச்சரகர்கள் களக்காடு புகழேந்தி, திருக்குறுங்குடி கமலக்கண்ணன், கோதையாறு  பாலாஜி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aalangatty_kanamalai11

  டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

 • northensnow

  பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • baloon_worstand

  ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

 • redmoon_lunar12

  சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்