SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலககோப்பைக்கு விராட்கோலிக்கு அவகாசம் வழங்கவே கேப்டன் பதவியில் இருந்து விலகினேன் : எம்.எஸ்.டோனி

2018-09-14@ 08:57:24

ராஞ்சி: 2019ம் ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கு தயாராக விராத் கோஹ்லிக்கு போதுமான அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக எம்.எஸ்.டோனி தெரிவித்துள்ளார். ராஞ்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திறமையான வீரர்களை தேர்வு செய்து விட்டு, அணியை தயார்படுத்த கேப்டனுக்கு போதிய நேரம் வழங்கவில்லை என்றால் அது தவறாகிவிடும் என்பதால் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக டோனி கூறியுள்ளார். கேப்டன் பதவியில் இருந்து தான் விலகியது சரியான தருணம் என்று நம்புவதாகவும் டோனி குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு உலகக் கோப்பை உள்பட பல்வேறு கோப்பைகளை வாங்கிக் கொடுத்தவர் மகேந்திர சிங் டோனி. டோனி கேப்டனாக கோலோச்சிய காலத்திலேயே அதாவது 2017-ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியை தலைமை ஏற்கும் பொறுப்பில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். அதற்கு முன்பாகவே 2014-ம் ஆண்டு டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகினார். பின்பு அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். டோனி பதவியில் இருந்து விலகியதற்கு பிசிசிஐ நிர்பந்தம் காரணம் என கூறப்பட்டது. டோனியும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறாமல் இருந்தார்.

செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ஆசியக் கோப்பை போட்டிகள் தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று துபாய் புறப்பட்டது. ஆசியக் கோப்பையில் பங்கேற்பதற்கு முன்பு ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் டோனி பங்கேற்றார். முதல் முறையாக தான் கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கான காரணத்தை முதல் முறையாக மனம் திறந்து பேசினார் அவர். 2019 உலகக்கோப்பைக்கான அணியை உருவாக்க புதிய கேப்டனுக்கு போதிய அவகாசம் வழங்குவதற்காக எனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தேன் என்று விளக்கம் அளித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்