SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வரத்துகுறைவு, தொடர் விசேஷங்களால் பச்சை பட்டாணி விலை கடும் உயர்வு

2018-09-14@ 00:55:42

மதுரை: வரத்து குறைவு, தொடர் விசேஷம் எதிரொலியாக பச்சை பட்டாணி விலை கடுமையாக உயர்ந்து கிலோ ₹300க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில்  கொடைக்கா னல், ஊட்டி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில், பச்சை பட்டாணி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் பச்சை பட்டாணி  தமிழகம் முழுவதும் உள்ள மார்க்கெட்டுகளுக்கு அனுப்பப்படுகிறது.தற்போது இப்பகுதிகளில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்துள்ளது. அதேநேரம் தொடர் விசேஷங்கள் அடுத்தடுத்து வருவதால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ₹120க்கு விற்பனையான பச்சை பட்டாணி தற்போது ₹300க்கு  விற்பனையாகிறது.

 மதுரை சென்ட்ரல் காய்கறிகள் மார்க்கெட் சங்க தலைவர் முருகன் கூறும்போது, ‘‘இந்த மாதத்தில் அடுத்தடுத்த முகூர்த்த தினங்கள் இருப்பதால், அனைத்து வகையான காய்கறிகளின்  தேவையும் அதிகமாகவே உள்ளது. பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் வரத்து ஓரளவு இருந்தாலும், பச்சை பட்டாணி வரத்து மட்டும் குறைவாகவே உள்ளது.  மார்க்கெட்டிற்கு தினமும் 500 மூட்டைகள் வரை வரும் நிலையில், 200 மூட்டைகளுக்கும் குறைவாகவே தற்போது கொண்டு வரப்படுகிறது’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்