SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

எலாஸ்டிக் உற்பத்தியாளர் ஸ்டிரைக் 5 கோடி வர்த்தகம் பாதிப்பு

2018-09-14@ 00:55:28

திருப்பூர்: திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஸ்டிரைக்கால் ₹5 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் கவுந்தர்ராஜன், பொருளாளர் சந்திரமோகன் ஆகியோர் கூறியதாவது:  கேரளாவில் மழை வெள்ளத்தால் ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டு கிலோவுக்கு ₹25 அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பாலிஸ்டர் மற்றும் நைலான் நூல்  விலை கிலோவுக்கு ₹35 வரை உயர்ந்துள்ளது. இதனால், எலாஸ்டிக் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எலாஸ்டிக் மூலப்பொருட்களை முன் பணம் மற்றும் உடன் தொகை கொடுத்து கொள்முதல் செய்யப்படுகிறது.

பின்னலாடை துறையினருக்கு எலாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் போது நீண்ட நாள் கடன் வழங்கவேண்டியுள்ளது. பணம் கிடைக்கும் வரை கடன் வாங்கி மூலப்பொருள் கொள்முதல்  செய்யும் நிலை உள்ளது. இதனால் கடும் தொழில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரப்பர், பாலியஸ்டர் நூல் ஆகியவை வாரம் ஒரு முறை விலை அதிகரிக்கிறது. ரப்பர், பாலியஸ்டர், நைலான் நூல் விற்பனையாளர்கள் மாதம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை  விலை மாற்றம் செய்து ஒத்துழைப்பு தர வேண்டும். மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைத்து இந்திய ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்கவேண்டும்.

எலாஸ்டிக் விலை உயர்வு மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடன் கால அளவை குறைக்க வலியுறுத்தி நேற்று ஒரு நாள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால், ஒரு கோடி மீட்டர் எலாஸ்டிக் உற்பத்தியும், ₹5 கோடி விற்பனையும் பாதிக்கப்பட்டது. மேலும் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் 20 சதவீதம் விலை உயர்வு செய்ய வேண்டிய  நிர்பந்தத்தில் உள்ளோம். இவ்வாறு சங்க நிர்வாகிகள் கூறினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்