SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை தேயிலை மையத்தில் 2.63 கோடிக்கு விற்பனை

2018-09-14@ 00:55:27

கோவை: கோவை தேயிலை வர்த்தக மையத்தில்  நடந்த விற்பனையில் ரூ.2.63 கோடிக்கு தேயிலை  விற்பனையாகியுள்ளது. இது கடந்த வாரத்தை விட ₹28 லட்சம் அதிகமாகும்.கோவை  தேயிலை வர்த்தக மையத்தில் புதன் தோறும் ஆன்லைன் மூலம் ஏல முறையில்  தேயிலைத்தூள் விற்பனை நடக்கிறது. அதன்படி, நேற்று முன்தினம் மாலை நடந்த  ஏலத்தில் உள்ளூர் ரகம்  (டஸ்ட்) 2.05 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில்,  1.79 லட்சம் கிலோ விற்பனையானது.

சராசரி விற்பனை விலை கிலோ ₹113.24. விற்பனை மதிப்பு ₹2.03 கோடி.ஏற்றுமதி ரகம் (லீப்) 75 ஆயிரம் கிலோ  விற்பனைக்கு வந்தது. இதில், 56 ஆயிரம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை  விலை கிலோ ₹106.75. விற்பனை மதிப்பு ₹60 லட்சம். கடந்த வார விற்பனையோடு  ஒப்பிடுகையில், உள்ளூர் ரகம் கிலோவுக்கு 24 பைசாவும், ஏற்றுமதி ரகம்  கிலோவிற்கு  ₹3.30ம் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் உள்ளூர் மற்றும்  ஏற்றுமதி ரக தேயிலைத்தூள் ₹2.63 கோடிக்கு விற்றுள்ளது. இது கடந்த வாரத்தை  விட ₹28 லட்சம் அதிகமாகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்