SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: வீரர்கள் 8 பேர் காயம்

2018-09-14@ 00:54:53

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் ஜெய்ஸ் இ முகமது அமைப்பை சேர்ந்த3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையில் போலீஸ் டிஎஸ்பி உட்பட 8 பேர்  காயமடைந்தனர். காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படையினர் மீது நேற்று முன்தினம் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்துக்கு பின்னர்  கக்ரியால் பகுதியில் உள்ள காட்டுக்குள் தப்பி சென்றனர். இதனையடுத்து தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர், போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். டிரோன்  மற்றும் ஹெலிகாப்டர்களும் தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் தீவிரவாதிகள் யாரும் சிக்கவில்லை.

இந்நிலையில், கக்ரியால் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரிடம் இருந்து பாதுகாப்பு படையினருக்கு தீவிரவாதிகள் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 8  மணிக்கு  வீட்டிற்கு வந்த 3 தீவிரவாதிகள் உடை மற்றும், உணவு கேட்டு மிரட்டியுள்ளனர்.வாகனம் வேண்டும் என்றும் மிரட்டிய அவர்கள், அந்த குடும்பத்தினரிடம் வாகனம் இல்லாததால்  வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். ஜாஜ்ஜார்-கோட்லி காட்டுப்பகுதியில்அவர்களை தேடி சென்றபோது வீரர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். பதிலுக்கு வீரர்கள் நடத்திய  தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இவர்கள் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் இதில் 5 சிஆர்பிஎப் வீரர்கள் டிஎஸ்பி உட்பட 8 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டை  அடுத்து அங்கிருந்த தீவிரவாதிகள் தப்பி சென்றதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையே, உபி.யின் கான்பூர் நகரில் விநாயகர் சதுர்த்தி விழாவில் சதி செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி காமர் உஜ் ஜமா (37)  என்பவனை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்