SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

200 கடன் பெற்று வாங்கிய லாட்டரியில் 1.5 கோடி பரிசு: செங்கல் சூளை தொழிலாளிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி

2018-09-14@ 00:54:52

மாண்ட்வி: தினமும் ₹250 கூலி வாங்க போராடும் பஞ்சாப் செங்கல் சூளை தொழிலாளி கடன் பெற்று வாங்கிய லாட்டரியில் ₹1.5 கோடி பரிசு கிடைத்துள்ளது.பஞ்சாப் மாநிலம், சங்ரூர் மாவட்டம், மாண்ட்வி கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ் குமார். வயது 40. இவரது மனைவி ராஜ்கவுர். இருவரும் அங்குள்ள செங்கல் சூளையில் கூலி வேலைக்கு சென்று  வந்தனர். ஒரு செங்கலுக்கு அவர்களுக்கு 50 பைசா கூலி வழங்கப்படும். நாள் முழுவதும் கடினமாக உழைத்தாலும் அதிகபட்சமாக ₹250 கிடைக்கும். இதை வைத்து அவர்கள் குடும்பம் நடத்தி  வந்தனர். மனோஜ் குமார் தம்பதிக்கு 3 மகள்கள். ஒரு மகன். மூத்தமகள் பிளஸ் 2 தேர்வு முடித்து விட்டு மேற்கொண்டு படிக்க முடியாததால் சங்ரூரில் வேலை தேடி வந்தார். இரண்டாவது மகள்  தற்போது பிளஸ் 2 படித்து வருகிறார். மூன்றாவது பிறந்த மகன் தற்போது எஸ்எஸ்எல்சி படித்து வருகிறார். கடைசி மகள் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.

மனோஜ்குமரின் தந்தை ஹவாசிங் சமீபத்தில்தான் இறந்தார். அவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சரியான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூட பணம் இல்லை. தாய்  கிருஷ்ணி தேவியும் இவர்களுடன் தான் வசித்து வருகிறார். ஒட்டு மொத்தத்தில் குடும்பம் வறுமையில் வாடியது. பக்கத்து வீட்டில் வசிக்கும் மனோஜ்குமாரின் மூத்த சகோதாரர் அவ்வப்போது  பண உதவி செய்து வந்தார். இந்நிலையில் ராக்கி பம்பர் லாட்டரி மூலம் மனோஜ்குமாரை தேடி அதிர்ஷ்டம் வந்துள்ளது. வழக்கமாக லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் மனோஜ் குமாருக்கு கிடையாது. ராக்கி பம்பர் லாட்டரி பற்றி  கேள்விப்பட்டதும் திடீரென தன்னுடன் வேலை செய்யும் இன்னொரு நண்பரிடம் இருந்து ₹200 கடன் வாங்கி ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார்.

ஆகஸ்ட் 30ம் தேதி காலை உள்ளூர் தபால்காரர் மனோஜ்குமார் வீடு தேடி வந்தார். அப்போது அவர் வாங்கி லாட்டரிக்கு ₹1.5 கோடி பரிசு கிடைத்து இருப்பதாக தெரிவித்தார். அவர் கொண்டு வந்த  பேப்பரில் உள்ள எண்ணும், மனோஜ்குமார் வாங்கிய லாட்டரி சீட்டு எண்ணும் சரியாக இருக்கவே ஒட்டுமொத்த குடும்பமும் தற்போது மகிழ்ச்சிக்கடலில் மூழ்கி உள்ளது. இப்போது வங்கி  அதிகாரிகள் மற்றும் நில புரோக்கர்கள் அவர்கள் வீட்டை தட்டியபடி உள்ளனர். தங்களது திட்டத்தில் முதலீடு செய்ய வற்புறுத்தி வருகின்றனர்.

என் தந்தையின் கனவு 1.5 கோடி பரிசு பெற்றது குறித்து மனோஜ்குமார் கூறியதாவது:
தினசரி கடினமாக உழைத்தாலும் என்னால் ₹250க்கு மேல் வாங்க முடியாது. ஒரே நாளில் ₹1.5 கோடி என்பது இன்ப அதிர்ச்சியாக உள்ளது. என் தந்தை ஹவாசிங் சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடை  வைத்து இருந்தார். ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். நான் 15 வயதிலே கூலி வேலைக்கு சென்று விட்டேன். எனது சிறிய சேமிப்பும் தந்தையின் மருத்துவ செலவிற்குத்தான் பயன்பட்டது.  ஆனால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் உயிரோடு இருக்கும் போது நான் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். இப்போது லாட்டரி பணம் மூலம் அவரது கனவு நிறைவேறி  இருக்கிறது. நான் முதன்முதலில் வாங்கி சீட்டுக்கு ₹1.5 கோடி பரிசு கிடைத்து இருக்கிறது.இவ்வாறு கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-11-2018

  18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-11-2018

  17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

 • NagaiGajaStorm

  நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்