SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மனைவி தற்கொலை இன்ஜினியர் கைது

2018-09-14@ 00:42:26

வேளச்சேரி: பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம், கஜேந்திரன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர்  சுரேஷ். தனியார் நிறுவன சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மனைவி ரோகினி என்கிற பார்கவி (27). பி.டெக் பட்டதாரி. இவர்களது சொந்த ஊர் ஆந்திரா மாநிலம், சித்தூர். தம்பதிக்கு திருமணமாகி, 4 ஆண்டுகள் ஆகின்றன. தம்பதிக்கு 2 வயதில் அஸ்வித்தா என்கிற மகள் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரோகினி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவரிடம் விசாரணை நடத்தினர்.

இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமை ஏதாவது உள்ளதா? என்பது குறித்து ஆர்டிஓ  விசாரணையும் நடந்து வருகிறது. இதற்கிடையே மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சுரேஷை போலீசார் கைது செய்தனர். அவரது குழந்தையை மீட்டு, ரோகினி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்