SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலவசமாக பயணம் செய்தனர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் காந்தி குடும்பத்திற்கு சொந்தம்: பா.ஜனதா கடும் தாக்கு

2018-09-14@ 00:40:05

புதுடெல்லி: ‘‘கிங்பிஷர் ஏர்லைன்ஸ் காந்தி குடும்பத்திற்குத்தான் சொந்தமானது. அதனால்தான் பல ஒப்பந்தங்கள் அதற்கு வழங்கப்பட்டன’’ என்று பாஜ தெரிவித்துள்ளது.விஜய் மல்லையாவை சந்தித்ததாக கூறப்பட்ட பிரச்னையில் அருண்ஜெட்லி நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று அதிரடியாக  தெரிவித்தார். இந்த நிலையில், ராகுல் காந்தியை பாஜ.வின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா கடுமையாக தாக்கி பேசினார். டெல்லியில் நேற்று அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்திக்கு கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு உள்ளது. விஜய் மல்லையாவுக்கும் மற்றும் அவரது விமான நிறுவனத்திற்கும் பின்னணியாக ராகுல் காந்திதான்  இருந்துள்ளார்.  

ராகுலின் மொத்த குடும்பமும் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளது.  அவர்கள் இலவச அடிப்படையில் பயணம் செய்ததுடன், அந்த பயணம் முதல் வகுப்பிலும்  நடந்துள்ளது. ராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடும்பத்தினரும் உண்மையில் மல்லையா மற்றும் அவரது விமான நிறுவனத்திற்கு பல லாபகரமான ஒப்பந்தம் வழங்கி உதவி  செய்துள்ளனர். இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் எஸ்பிஐ இடையே தொடர்ச்சியாக கடித பரிமாற்றங்கள் நடந்துள்ளன.  இந்த கடிதங்கள், ஒரு சார்புடனும், பகுதியாகவும் மற்றும்  அனைத்து  விதிமுறைகளையும் புறந்தள்ளி வைத்துவிட்டு அந்நிறுவனத்திற்கு இனிப்பு  ஒப்பந்தம் வழங்கியது என்பதனை வெளிப்படுத்தும். சில நேரங்களில் பார்க்கும் போது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மல்லையாவுக்கு சொந்தம் இல்லாதது போல் தோன்றும். அது காந்தி குடும்பத்தின் பினாமி சொத்து போல் தெரியும். அந்த  அளவுக்கு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.  இவ்வாறு அவர் கூறினார்.




மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்