SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

என்எஸ்ஜி.யில் உறுப்பினராகும் முழு தகுதி இந்தியாவுக்கு உள்ளது: அமெரிக்கா நற்சான்று

2018-09-14@ 00:18:04

வாஷிங்டன்: ‘‘என்எஸ்ஜி.யில் சேர இந்தியாவுக்கு முழு தகுதியும் உள்ளது’’ என்று அமெரிக்கா மீண்டும் கூறியுள்ளது. அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு மட்டுமே, அணுசக்திக்கு தேவையான யூரேனியத்தை உற்பத்தி நாடுகளிடம் இருந்து பெற முடியும்.  தற்போது இக்குழுவில் 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. என்எஸ்ஜி.யில், உறுப்பினராக இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து முயற்சி மேற்ெகாண்டு வருகின்றன. இக்குழுவில் சேர்வதன் மூலம் மட்டுமே நாட்டில் அணு மின்சக்தியை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை பெருமளவில் அதிகரிக்க முடியும்.

தற்போது இந்தியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட முக்கிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், குழுவில் உள்ள ஒரு உறுப்பு நாடு எதிர்ப்பு தெரிவித்தாலும், புதிய நாடு குழுவில் இடம் பெற முடியாது. இதற்காகத்தான் பிரதமர் மோடி தன்னுடைய வெளிநாட்டு பயணத்தின்போது பல்வேறு நாடுகளின் ஆதரவை திரட்டி வருகிறார். இந்த குழுவில் இருக்கும் சீனா, வீட்டோ அதிகாரம் பெற்றது. தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, இந்தியாவை உறுப்பு நாடாக சேர்க்க விடாமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதற்கு அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதை சீனா காரணம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு மீண்டும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. என்எஸ்ஜி.யில், சேர இந்தியாவுக்கு முழு தகுதி இருப்பதாகவும், சீனாவின் எதிர்ப்பால் இந்தியாவில் இடம் பெற முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான முதன்மை துணைச் செயலாளர் அலைஸ் வெல்ஸ் கூறுகையில், ‘‘என்எஸ்ஜி.யில் இந்தியா இடம் பெற ஆக்கப்பூர்வமாக வாதாடுவோம். சீனாவின் முட்டுக்கட்டையால்தான் இந்தியா இக்குழுவில் இணைய முடியவில்லை. ஆனால், விரைவில் இக்குழுவில் இணைவதற்கான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து, இந்தியா அதில் இடம்பெறும்’’ என்று கூறினார்.

ஈரான், ரஷ்யாவுடன் தொடர்பு: இந்தியா மீது அமெரிக்கா கோபம்
ஈரானிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. ஆனால் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்தது. மேலும் இந்தியாவும் அதை பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தியது. ஆனால் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வசதியாக சாபாஹர் துறைமுக பணிகள் குறித்து கடந்த செவ்வாய்கிழமை ஆப்கனின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஹெக்மாட் ஹலில் ஹர்சாய், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகெய்ல், ஈரான் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இது அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே போல் ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய அளவுக்கு இந்தியா ராணுவ தளவாடங்கள் வாங்குவது குறித்தும் அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2018

  22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

 • florence&trumph

  பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

 • greenlandicemelt

  கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்