SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேரணாம்பட்டு அருகே ஆய்வு செய்ய சென்ற பள்ளியில் அதிகாரிக்கு தடபுடல் விருந்து: ‘வாட்ஸ் அப்’பில் வைரலாகி வரும் படங்கள்

2018-09-14@ 00:16:09

வேலூர்: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றியத்தில் சுமார் 120 பள்ளிகள் உள்ளன. பேரணாம்பட்டு ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலராக மோகன்  என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பேரணாம்பட்டு அடுத்த எம்ஜிஆர் நகரில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு ஆய்வு செய்ய சென்றார். மதிய உணவு நேரத்தில்  அங்கு இருந்த ஒரு வகுப்பறையில் ஆசிரியர்களின் வகுப்பறை மேஜைகளை போட்டு திடீர் டைனிங் டேபிள் ஏற்பாடு செய்தனர்.

பின்னர், அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் கொண்டு வந்த மீன், இறைச்சி, பிரியாணி என தடபுடல் விருந்து அதிகாரிக்கு பரிமாறப்பட்டது. ஆர்வத்துடன் வட்டார கல்வி அலுவலரும்  தலைவாழை இலை போட்டு 15க்கும் மேற்பட்ட விதம் விதமான உணவு வகைகளை சாப்பிட்டார். விருந்து முடிந்ததும் அவருக்கு ஜூஸ் வழங்கப்பட்டது. பின்னர், 11 ஆசிரியர்களுடன் குரூப் போட்டோ  எடுத்து கொண்டார். விருந்து மற்றும் குரூப போட்டோக்கள் தற்போது பேரணாம்பட்டு, ஆம்பூர், மாதனூர், வாணியம்பாடி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில்  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த  படங்கள், கல்வி அலுவலருக்கு தடபுடல் விருந்து வழங்கப்பட்டது குறைகளை கண்டிக்கவோ? கேட்கவோ கூடாது என்பதற்காகவா? கல்வித்துறை கண்டு கொள்ளுமா? என்ற வாசகங்களுடன்   உலா வருகிறது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்