SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பிலிப்ஸ் அதிரடி சதம் வீண் ஜமைக்காவை வீழ்த்தியது பேட்ரியாட்ஸ்: அரை இறுதிக்கு சிபிஎல் தகுதி

2018-09-14@ 00:09:41

கயானா: கரிபீயன் பிரிமியர் லீக் டி20 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஜமைக்கா தல்லவாஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற செயின்ட் கிட்ஸ் பேட்ரியாட்ஸ் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. புராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி கேப்டன் கிறிஸ் கேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரர் கிளென் பிலிப்ஸ் அதிரடியாக சதம் விளாச, ஜமைக்கா தல்லவாஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன் குவித்தது. பிலிப்ஸ் 103 ரன் (63 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்), ராஸ் டெய்லர் 33, பாவெல் 15, கேப்டன் ரஸ்ஸல் 10, டேவிட் மில்லர் 19* ரன் விளாசினர்.

அடுத்து களமிறங்கிய செயின்ட் கிட்ஸ் 19.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்து வென்றது. ஆன்டன் தேவ்சிச் அதிகபட்சமாக 50 ரன் (23 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். கேப்டன் கேல் 26 (30 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஆலன் 23 ரன் (10 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), வாண்டெர் தசன் 20, பென் கட்டிங் 17* ரன் (10 பந்து, 2 சிக்சர்) எடுத்து வெற்றிக்கு உதவினர். தேவ்சிச் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கயானா அமேசான் வாரியர்ஸ் அணி ஏற்கனவே பைனலுக்கு முன்னேறியுள்ள நிலையில், எலிமினேட்டரில் வெற்றி பெற்ற பேட்ரியாட்ஸ் அணி 2வது குவாலிபயர் ஆட்டத்தில் (அரை இறுதி) இன்று டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 17ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் கயானாவை சந்திக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்