SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இலங்கையுடன் மகளிர் கிரிக்கெட் 7 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி: மித்தாலி, டானியா அரை சதம்

2018-09-14@ 00:09:38

காலே: இலங்கை மகளிர் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. இலங்கையின் காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாசில் வென்று பேட் செய்த இந்திய அணி, 50 ஓவரில் 219 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் மித்தாலி ராஜ் 52 ரன் (121 பந்து, 4 பவுண்டரி), டானியா பாட்டியா 68 ரன் (66 பந்து, 9 பவுண்டரி), ஹேமலதா 35 ரன் (31 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி கடுமையாகப் போராடியதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. அந்த அணியின் கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான ஜெயாங்கனி 57 ரன் (95 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), சசிகலா வர்தனே 49 ரன் (91 பந்து, 6 பவுண்டரி),

சஞ்ஜீவனி, வீரக்கொடி தலா 17, நீலாக்‌ஷி 31 ரன் (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசியதை தொடர்ந்து இலங்கை அணி இலக்கை நெருங்கி மிரட்டியது.எனினும், இந்திய வீராங்கனைகள் பதற்றமின்றி விளையாடி தொடர்ந்து விக்கெட் வேட்டை நடத்தினர். இலங்கை அணி 48.1 ஓவரில் 212 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய பந்துவீச்சில் மான்சி ஜோஷி 3, ராஜேஷ்வரி 2, தீப்தி, பூனம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இலங்கையின் 3 வீராங்கனைகள் ரன் அவுட்டானது அந்த அணியின் வெற்றி வாய்ப்பை பாதித்தது. பரபரப்பான ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா 2-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி போட்டி கதுநாயகேவில் 16ம் தேதி நடக்கிறது.

ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த தொடரில், இந்திய அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் மொத்தம் 4 புள்ளிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா இதுவரை 8 போட்டியில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து (12), ஆஸ்திரேலியா (10), இங்கிலாந்து (10), பாகிஸ்தான் (8) முதல் 4 இடங்களில் உள்ள நிலையில்... வெஸ்ட் இண்டீஸ் (6), தென் ஆப்ரிக்கா (4), இலங்கை (0) அணிகள் பின்தங்கியுள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்