SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல் முறையாக சீசன் டிக்கெட்: 1500, 3000க்கு விற்பனை

2018-09-14@ 00:09:35

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகளைக் காண முதல்முறையாக சீசன் டிக்கெட் முறையை சென்னையின் எப்சி அணி  அறிமுகப்படுத்துகிறது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 5வது சீசன் இம்மாதம் 29ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்திய அணி  உலக கோப்பை தகுதிப் போட்டிகள், ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாட உள்ளதால், டிசம்பர் மாதம் வரை நடைபெறும் லீக் போட்டிகளின் விவரங்கள் மட்டும்  அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் அக். 6ம் தேதி முதல் டிச.15ம் தேதி வரை சென்னையின் எப்சி அணி மோதும் 6 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த 6 போட்டிகளையும் ரசிகர்கள் காண சென்னையின் எப்சி அணி முதல்முறையாக சீசன் டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக 1500, 3000 விலையில் 2 வகையான சீசன் டிக்கெட்களை ஆன்லைன் மூலம் வாங்கலாம். டிக்கெட்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க தனிக்கட்டணம். போட்டிகள் நடைபெற உள்ள நேரு விளையாட்டரங்கில் பி-பகுதியில் முதல் தளம், ஈ பகுதியில்  முதல், 2வது தளம் சீசன் டிக்கெட் வாங்குபவர்களுக்காக ஒதுக்கப்படுகிறது. சீசன் டிக்கெட் வாங்கும் அனைவருக்கும் சென்னை அணியின் சீருடை, கர்சிப், சாவிக்கொத்து வழங்கப்படும். இவை தவிர சீசன் டிக்கெட் வாங்கும் முதல் 200 ரசிகர்களுக்கு  சென்னை அணி வீரர்களை பயிற்சியின்போது சந்திக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்