SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேசிய அளவிலான தற்காப்புக்கலை போட்டியில் தங்கம் வென்ற சென்னை மாணவர்கள்

2018-09-14@ 00:04:00

சென்னை: தேசிய அளவிலான தற்காப்புக்கலை போட்டியில் தங்கம் வென்ற சென்னையை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவர்களை மாநகராட்சி துணை ஆணையாளர் லலிதா  பாராட்டினார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு:பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும் வில்லிவாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சு.அணில்குமார் மற்றும் வினோத் ஆகியோர்  கோவா-பனாஜியில் 25.8.2018 முதல் 26.8.2018 வரை தேசிய அளவில் நடந்த டேக்ஒன் டோ என்ற தற்காப்புக்கலை போட்டியில் 25-30 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப்பதக்கம் வென்று  சாதனைபுரிந்துள்ளனர்.

தொடர்ந்து, 2019ல் நடைபெற இருக்கும் ஆசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளவும், இந்த மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பது பெருநகர சென்னை மாநகராட்சி  கல்வித்துறைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. வெற்றி பெற்ற மாணவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (கல்வி) (பொறுப்பு) ஆர்.லலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.




மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்