SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

முதல்வர் மீது நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு ஊழல் புகார்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

2018-09-13@ 02:15:58

* விசாரணை குறித்து விவர அறிக்கை தாக்கல் செய்ய அதிரடி உத்தரவு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை துறை ஒப்பந்த முறைகேடு புகார் மீது யாரிடம் எல்லாம் விசாரணை நடத்தினீர்கள், நிபுணர் குழுவிடம் விசாரணை நடத்தினீர்களா என்பது குறித்து விவர அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சாலை திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் முதல்வரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பினாமிகளாக செயல்பட்டவர்களுக்கு ரூ.4833.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், முதல்வரின் துணையுடன் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

  நெடுஞ்சாலை துறையில் டெண்டர் ஒதுக்கீடு தொடர்பாக கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு ெசய்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கொடுத்த லஞ்ச புகாரை பாரபட்சமின்றி விசாரணை நடத்தும் வேறு சிறப்பு விசாரணை அமைப்பு மாற்றக்கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீண்டும் ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ‘‘ஒரு கி.மீட்டர் தூரத்துக்கு நான்கு வழிச் சாலையை அமைக்க 21.5 கோடி ரூபாய் டெண்டர் தரப்பட்டுள்ளது.

அதிகபட்சம் பார்த்தால் ரூ.8 கோடியில் இருந்து ரூ.10 கோடி வரைதான் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு செலவாகும். ஆனால், முதல்வரின் உறவினர் என்பதால் இந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை, முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் அவர் மீது கொடுக்கப்படும் புகார் மீது அந்த துறை அதிகாரிகள் எப்படி நியாயமாக விசாரணை நடத்துவார்கள். ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறையில் உயர் விசாரணை அதிகாரியாக உள்ள மூத்த அதிகாரி மீது அதே துறையை சேர்ந்த பெண் அதிகாரி கொடுத்த பெண் கொடுமை தடுப்பு சட்ட புகாரும் நிலுவையில் உள்ளது. இந்த அதிகாரியால் எப்படி சரியான ஒரு விசாரணை நடத்த முடியும்’’ என்றார்.

 அப்போது, நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள வல்லுநர் குழு இந்த டெண்டர் விவகாரம் குறித்து ஆய்வு செய்ததா என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, ‘‘நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளோம். புகாரில் விசாரணை மேற்கொண்டு அதை சீலிட்ட கவரில் தாக்கல் செய்துள்ளோம். அதில்தான் வழக்குபதிவு செய்ய முகாந்திரம் உள்ளதா இல்லையா என்பது தெரியவரும். முதல்வர் மீதான குற்றச்சாட்டுக்களை கூறி, வழக்கு பதிவு செய்யுங்கள் என கூறமுடியாது என்றார். அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்த கவரை பிரித்துப்பார்க்க மறுத்த நீதிபதி விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யுங்கள் என்றார்.

அப்போது, மனுதாரர் வக்கீல் என்.ஆர்.இளங்கோ நீதிபதியிடம், ‘‘அட்வகேட் ஜெனரல் லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆஜராகிறாரா? அல்லது குற்றம்சாட்டப்பட்ட முதல்வருக்கு ஆஜராகிறாரா என்பதே கேள்வியாக உள்ளது. உலக வங்கி நிதி உதவியில் நடைபெறும் திட்டத்தில் முறைகேடு புகார் என்பதால் உலக வங்கி அதிகாரி யாரிடமாவது விசாரிக்கப்பட்டதா என்பதே தெரியவில்லை. தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் டெண்டர்களில் 2 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர். ஊழல் தடுப்புத் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவர்களால் நேர்மையான முறையில் விசாரணை நடத்த முடியாது.

எனவேதான் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்’’ என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீபதிபதி, ‘‘மனுதாரர் கொடுத்த புகார் மீது நடத்தப்பட்ட விசாரணை, ஒப்பந்த பணிகள் தொடர்பான நிபுணர் குழு விசாரணை, யாரிடம் எல்லாம் விசாரணை நடந்தது என்பது குறித்து வரும் திங்கட்கிழமை லஞ்ச ஒழிப்பு துறை விவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • amazon_bang_111

  ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

 • northkorea_southkore

  வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

 • americatoday_flood123

  அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

 • pakistan_vehicls12345

  பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

 • jawa_studentelection123

  ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்