SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

2018-09-13@ 02:13:28

சென்னை: அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட வேண்டும் என்றும் பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழகத்தின் 1967-69ம் ஆண்டுகளில் முதல்வராக இருந்த அண்ணாதுரைக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்குவதற்காக முன்மொழிந்து இந்த கடிதத்தை எழுதுகிறேன். மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியான அண்ணா, சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், இலக்கிய சொற்பொழிவாளர், திராவிட இயக்கத்தின் தலைவராகவும் விளங்கினார்.

அவரது அனல் பறக்கும் உரைகளால் ஏழை, எளியவர்கள் மத்தியிலும் அறிவு புரட்சி ஏற்பட்டது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தத்துவ மற்றும் மந்திர வார்த்தைகள், அண்ணாவினால் உருவாக்கப்பட்டவை ஆகும். பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள், அனைத்து தரப்பினராலும் பாராட்டை பெற்றுள்ளன. அவர் இறந்து 49 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அண்ணாவை பலரும் நினைவில் கொண்டுள்ளனர். தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் அவர் அளித்த பங்களிப்புகளுக்காக, இந்தியாவிலேயே உயரிய விருதான பாரத ரத்னா விருதை அண்ணாவுக்கு வழங்கி கவுரவிக்க வேண்டும்.

சினிமாவில் மிகவும் புகழ்பெற்று, மக்களால் புரட்சி தலைவர் என்று பாசமாக அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் பெயரை சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்துக்கு சூட்ட வேண்டும். அதுபோல, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். புரட்சி தலைவி என்று மக்கள் நினைவுகளில் இடம் பிடித்திருப்பவர் அவர். அரசியல் வாழ்க்கையில் அவர் மிகப்பெரிய தடைகளை கடந்து வந்தார். அவரது புகழ் நாடு கடந்து வெளிநாடுகளிலும் பரவியுள்ளது.

ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டத்தை அன்னை தெரசாவே புகழ்ந்திருக்கிறார். தாலிக்கு 8 கிராம் தங்கம் போன்ற பல்வேறு ஏழை மக்கள் நலம் பெறும் முன்மாதிரித் திட்டங்களை கொண்டு வந்து தமிழகம் ஏற்றம் பெறும் கருவியாய் ஜெயலலிதா விளங்கினார். எனவே ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • modi68bday

  வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

 • losangeleswaterlight

  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

 • vinayagarsilai

  சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

 • mankutstromchina

  தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

 • tirupathififth

  திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்