SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவதற்கு உதவிய சிறுத்தை சிறுநீர், மலம்: முன்னாள் ராணுவ கமாண்டர் பேட்டி

2018-09-13@ 01:54:53

புனே: பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருந்த தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலுக்கு சிறுத்தையின் சிறுநீர் மற்றும் மலம் உதவியதாக நக்ரோடா முன்னாள் ராணுவ கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ராஜேந்திர நிம்போர்க்கர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் உரி பகுதியில் நடத்திய திடீர் தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் என பிரதமர் மோடி எச்சரித்ததை தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இந்திய வீரர்கள் புகுந்து நடத்திய, சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் அதிரடி தாக்குதலில் அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை அழித்தனர். இதுபற்றிய வீடியோ விவரங்கள் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டாலும், எப்படி தாக்குதல் நடந்தது என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதுபற்றி முதன் முறையாக நக்கேராடா முன்னாள் ராணுவ கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ராஜேந்திர நிம்போர்க்கர் மனம் திறந்து பேசியுள்ளார். சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்த முக்கிய நபராக இருந்தவர் இவர்தான். இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் விருது வழங்கும் விழா புனேயில் நடந்தது. முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி விருது வழங்கினார். அதன்பின் ராணுவ அதிகாரி ராஜேந்திர நிம்போர்க்கர் கூறியதாவது: பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று அப்போதைய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் எங்களிடம் தெரிவித்தார். இதற்காக அவர் ஒரு வாரம் அவகாசம் அளித்தார். இதையடுத்து நாங்கள் ஒரு வாரம் ஆலோசனை நடத்தினோம். ஆனால் எந்த இலக்கு என்பது மட்டும் யாருக்கும் தெரியாது. சர்ஜிக்கல் தாக்குதலுக்கு ஒரு நாள் முன்பு தான் இலக்கு மற்றவர்களுக்கு தெரியும்.

தாக்குதல் நடத்தப்பட்ட நவ்ஷேரா பகுதி முழுவதும் எனக்கு நன்றாக தெரியும். அங்கு நாய்கள் அதிகம். அந்த வழியாக நமது வீரர்கள் கடந்து சென்றால் நாய்கள் குறைக்கும். எதிரிகள் விழிப்படைந்து விடுவார்கள். ஆனால் சிறுத்தைகளும் அந்த பகுதியில் அதிகம். சிறுத்தைகளுக்கு பயந்து இரவு நேரங்களில் நாய்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்றுவிடும். இதை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். எங்களது தாக்குதல் திட்டத்தில் முதலில் நாய்கள் குறைப்பதை தடுக்க குடியிருப்பு பகுதியைச் சுற்றி சிறுத்தையின் சிறுநீரை தெளிப்பது மற்றும் மலத்தை கொண்டு போடுவது என்று முடிவு எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அதனால் நாய்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை.

இதை பயன்படுத்திக்கொண்டு நாங்கள் தாக்குதல் நேரத்தை நிர்ணயித்தோம். அதிகாலை 3.30 மணிக்கு திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலுக்கு முன் நமது படையினர் எல்லை தாண்டி சென்று பாதுகாப்பான இடத்தில் மறைந்து இருந்தார்கள். உத்தரவிட்டதும் அதிரடி தாக்குதல் நடத்தி 3 தீவிரவாதிகள் முகாமையும், 29 தீவிரவாதிகளையும் கொன்றனர். இந்த அதிரடி தாக்குதல் பாகிஸ்தான் ராணுவ தளபதிகளுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

 • hungary_policepadhuga11

  புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

 • ThaiSanctuaryPiano

  யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்