குடிபோதையில் காரில் தூங்கிய டிரைவர் நாக்குவறண்டு சாவு
2018-09-13@ 01:44:17

தாம்பரம்: குடிபோதையில் காரில் தூங்கிய டிரைவர் நாக்குவறண்டு பரிதாபமாக இறந்தார். தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று மதியம் கார் ஒன்று சந்தேகிக்கும்படி நின்றுகொண்டிருப்பதாக சேலையூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த காரை திறந்து சோதனை செய்தபோது காரின் முன்பக்க இருக்கையில் ஒருவர் இறந்த நிலையில் இருந்துள்ளார்.
உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், இறந்த நபர் சேலையூர் அடுத்த மப்பேடு கஸ்பாபுரம் பகுதியை சேர்ந்த தேவதாஸ் ஜான் (35) என்றும், கடந்த 6 ஆண்டகளாக சொந்தமாக கார் வைத்து ஊபர் நிறுவனத்தில் இணைத்து கார் ஓட்டிவந்ததாகவும், தேவராஜ் குடிப்பழக்கம் உடையவர் என்பதால் சவாரி முடித்துவிட்டு செம்பாக்கம் பகுதியில் சாலை ஓரம் காரை நிறுத்தி மது அருந்தி காரிலேயே உறங்கியதால் நாக்கு வறண்டு உயிரிழந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
மேலும் செய்திகள்
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 2 தமிழக வீரர்களுக்கு இறுதி அஞ்சலி
சித்தூரில் இருந்து தச்சூர் வரை விவசாயிகளை ஒடுக்கும் 6 வழி அழிவுச் சாலை யாருக்கு? : எதிர்ப்பையும் மீறி நிலத்தை அளவீடு செய்யும் அரசு
எஸ்ஐ கொடுத்த புகார் எப்ஐஆர் போடாமல் காலம் கடத்தும் இன்ஸ்.,
ஆந்திரா மாநிலத்தில் 30 மைல்களுக்குள் பாலாற்றில் 22 தடுப்பணைகளை கட்டி நீரை தடுக்கலாமா?
சென்னை-பெங்களூரு இடையே 4 நாட்களுக்கு ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு
கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட தரக்கட்டுபாட்டு பிரிவு கோட்டம் ஒரு பணிகளை கூட ஆய்வு செய்யவில்லை
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு