SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவதி மக்களுக்கு தானே

2018-09-13@ 00:11:54

வராக்கடன் தான் இன்றைய சூழ்நிலையில் இந்திய பொருளாதாரத்தை அடியோடு பாதித்துள்ள ஒன்று. ஊழல், கருப்பு பணம் உள்ளிட்ட அனைத்து பாதக அம்சங்களையும் தாண்டி இன்று இந்திய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது வராக்கடன். பெரிய நிறுவனங்கள் முக்கிய திட்டங்களில் முதலீடு செய்ய, நாட்டின் கட்டமைப்பை உருவாக்க வங்கிகள் கொடுத்த கடன் முறைப்படி திரும்பிவராதததால் இந்த வராக்கடன் அளவு இன்று விண்ணைத்தொடும் அளவு உயர்ந்து நிற்கிறது.

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் வராக்கடன் பற்றி அளித்த பேட்டி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ‘2006 முதல் 2008 வரை வங்கிகள் கொடுத்த கடன் திரும்பி வரவில்லை. இதை பெற வங்கிகள் எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதற்கு காரணம் வங்கி உயர் அதிகாரிகளின் திறமை இன்மையா அல்லது ஊழலா என்பதை என்னால் கணிக்க இயலவில்லை. எனவே வங்கிகள் சீர்குலைந்தன. அதை தடுக்க வராக்கடன் என்று அறிவிக்காமல், அந்த கடனை ஆண்டுக்கு ஆண்டு மாற்றி அமைக்கும் முயற்சியில் இறங்கின.
நான் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டோர் அடங்கிய பட்டியல் பிரதமர் மோடி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால்  அதிக மோசடியில் ஈடுபட்ட ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்று கூறியிருக்கிறார்.

ரகுராம் ராஜன் கூறியது போல் காங்கிரஸ் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் தான் அதிக அளவு வங்கி மோசடிகள் நடந்துள்ளன. தொழில் அதிபர் விஜய்மல்லையா தொடங்கி இன்றைய காலக்கட்டத்தில் சிக்கியுள்ள நீரவ் மோடி, மொகுல் சோக்‌ஷி வரை வங்கிகள் அள்ளிக்கொடுத்த கடனை பெற்றுவிட்டு, முறைப்படி திருப்பிச்செலுத்தாமல் ஏமாற்றி சென்று விட்டனர். எனவே வங்கி சீர்குலைவிற்கு காரணம் காங்கிரஸ் தான் என்று பிரதமர் மோடி உள்பட பா.ஜனதா தலைவர்கள் அத்தனை பேரும் இப்போது குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆனால் காங்கிரஸ் கருத்து வேறுவகையில் உள்ளது. 2014ல் காங்கிரஸ் கூட்டணி அரசு விட்டுச்சென்ற வராக்கடன்  ₹2.83 லட்சம் கோடி. ஆனால் இப்போது வராக்கடன் ₹12 லட்சம் கோடி. மோடியின் 56 மாத கால ஆட்சியில் மட்டும் உயர்ந்துள்ள வராக்கடன் அளவு ₹9.17 லட்சம் கோடி. இப்போது யார் வங்கி முறையை சீர்குலைத்தார்கள் என்று காங்கிரஸ் திருப்பிக்கேட்கிறது.
அரசியல் லாபங்களுக்காக காங்கிரசும், பா.ஜனதாவும் அள்ளிக்கொடுத்த கடனால் இந்தியாவின் பொருளாதாரம் சரிந்து போய் நிற்கிறது. பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. டாலர் மதிப்பு உயர்ந்து இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து போய் நிற்கிறது. சாமானியனுக்கு இந்த வராக்கடன், டாலர் மதிப்பு எல்லாம் தெரியாது. ஆனால் விண்ணைத்தொட்டு நிற்கும் விலைவாசிதான் அவனுக்கு புரியும். அது ஆளும்கட்சிக்கு ஆபத்தாக முடியும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-01-2019

  20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்