SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவை விட்டு வெளியேறும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தேன்: விஜய் மல்லையா

2018-09-12@ 20:02:39

லண்டன்: இந்தியாவை விட்டு வெளியேறும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்ததாக லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரான விஜய் மல்லையா தெரிவித்தார். பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சமடைந்தார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.

லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது.  இன்று வழக்கு விசாரணைக்கு விஜய் மல்லையா ஆஜராகினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இந்தியாவை விட்டு வெளியேறும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன். என் மீதான குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். எனினும், நீதிமன்றம் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். இவ்வாறு மல்லையா கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்