SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் 662 ஆரம்ப பள்ளிகளை மூட அரசு தீவிரம்: மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் முடிவு

2018-09-12@ 17:25:38

சென்னை: தமிழகத்தில் 662 அரசு ஆரம்பப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் தமிழக அரசு நடத்திய ஆய்வில் 900 தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் 10-க்கும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால் உத்தரவிற்கு பின்னரும் 662 ஆரம்பப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயரவில்லை.

இதனால் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கை பற்றியும் அரசு ஆலோசனை செய்து வருகிறது. மூடப்படும் பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கல்வியை ஊக்குவிப்பதற்காக மதிய உணவு திட்டம், விலையில்லா சீருடைகள் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் குறிப்பிட்ட அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை குறைந்துகொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

  • pulwama_kashmirthakuthal11

    காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு

  • rafael_porvimanm1

    சர்வதேச விமான கண்காட்சி: பெங்களூருவில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் விமான சாகச ஒத்திகை

  • fruitsvegpala1

    லக்னோவில் நடைபெற்ற வருடாந்திர காய்கறி, பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்