SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல கட்டுப்பாடுகளை விதித்து விநாயகர் சிலைகள் வைக்க தடை ஏற்படுத்துவதா?: தமிழக அரசுக்கு பாஜ தலைவர் கண்டனம்

2018-09-12@ 05:33:26

சென்னை: “பல கட்டுப்பாடுகளை விதித்து விநாயகர் சிலைகளை வைக்க முடியாத நிலையை ஏற்படுத்துவதா?” என்று தமிழக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை:
 தமிழகம் முழுவதும் உள்ள சகோதரர்கள் அனைவரும் விநாயகர் சிலையை நிறுவி சமூக விழாவாக கொண்டாடி வருகிறார்கள். இது ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியன்றும் பல்லாயிரக்கணக்கான இடங்களில் வைக்கப்படும். விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதி மக்களின் விழாவாக மாறி அந்த விழாக்களில் அப்பகுதி மக்கள் அங்கு நடக்கும்  போட்டிகளில் கலந்து கொள்வது, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, சேவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, பூஜை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என மக்கள் விழாவாகவே மாறி வருகிறது.

ஆனால் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து விநாயகர் பெருமான் சிலைகளை வைக்கவே முடியாது என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்படுவது  வன்மையாக கண்டிக்கத்தக்கது. மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டே இந்துமத நடவடிக்கைகளை முடக்குவதே இன்றைய ஆட்சியாளர்களின் கவனமாக இருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக முதல்வர் உடனே தலையிட்டு தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்கி தெருவெங்கும் விநாயகர் மக்கள் விநாயகராக இடம்பெற்று அருள்தர வழிவகை செய்யவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்