நீட் தேர்வு வயது உச்சவரம்பு விவகாரம் 5 ஆண்டு தேர்ச்சி பட்டியலை தாக்கல் செய்ய சிபிஎஸ்இ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
2018-09-12@ 04:39:49

புதுடெல்லி: ‘கடந்த 5 ஆண்டுகளில் நீட் உள்ளிட்ட மருத்துவ நுழைவுத்தேர்வு தேர்ச்சி பட்டியல் 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என சிபிஎஸ்இ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு வயது உச்சவரம்பு அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி கேரளாவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘நீட் தேர்வை 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் எழுத முடியாது’ என கூறி, ‘பொதுப்பிரிவினருக்கு 25 வயது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயது என சிபிஎஸ்இ நிர்வாகம் பிறப்பித்த ஆணை செல்லும்’ என உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மேற்கண்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அதில், ‘நீட் தேர்வு விவகாரத்தை பொறுத்தவரையில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள்தான் அதிகப்படியாக தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் வயது வரம்பை தளர்த்திய உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என கூறியிருந்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்ஏ.பாப்டே, நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த மேல் முறையீடு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘கடந்த 5 ஆண்டுகளில் நீட் உள்ளிட்ட மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதியவர்களின் வயது பட்டியல் மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சியடைந்த பட்டியலை அடுத்த 2 வாரத்தில் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களில் 23 பேரின் கடன்களை தள்ளுபடி செய்தது எஸ்பிஐ வங்கி
பெங்களூரில் இந்திய விமானப்படையின் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
காஷ்மீரில் நடந்த தாக்குதல் பின்னணியில் ஜெய்ஷ் இ முகமது மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பு உள்ளது: இந்திய ராணுவம்
சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமனத்தை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
ராஜஸ்தானில் திருமண ஊர்வலம் போது லாரி மோதியதில் 13 பேர் பலி: 15 பேர் படுகாயம்
டெல்லி நரேலாவில் உள்ள ஷூ தயாரிப்பு ஆலையில் திடீர் தீவிபத்து
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு
சர்வதேச விமான கண்காட்சி: பெங்களூருவில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் விமான சாகச ஒத்திகை
லக்னோவில் நடைபெற்ற வருடாந்திர காய்கறி, பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்