SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரச்னையை கிண்டிக்காரர் பக்கம் மடை மாற்றிவிட்ட ஆளுங்கட்சியின் அதிரடி திட்டம் குறித்து தெரிவிக்கிறார்: wiki யானந்தா

2018-09-12@ 04:37:02

‘‘என்ன பீட்டர் இன்னைக்கு மெரினா பக்கம் அழைச்சு வந்துட்டீங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நெடுஞ்சாலை துறை ஊழல், அண்ணா பல்கலைக்கழக ஊழல், குட்கா ஊழல், எல்இடி பல்பு ஊழல்னு எந்தப்பக்கம் பார்த்தாலும் மக்களின் மத்தியில் இப்போதைக்கு இந்தப் பேச்சுதான் காட்டாற்று வெள்ளம்போல ஓடுது... தமிழக உளவுத்துறை மூலம் மாநில அரசுக்கு எதிரான மனநிலையை மடைமாற்றி விடணும்னு ஆளுங்கட்சி தரப்பு நினைச்சாங்க... அதுக்கு ஏற்றார் போல காவிரியாற்றில் வெள்ளம் வந்து... விளைச்சலுக்கு திறந்துவிட்டு நல்ல பேரு வாங்கறதுக்குள்ள... முக்கொம்பு மேலணை உடைந்து... தமிழக அரசின் பெயரும் உடைஞ்சுபோச்சு... இயற்கை அரசை காப்பாற்ற நினைத்தாலும் முக்கொம்பு போன்ற அணைகள் கவுத்துவிடுதேன்னு ஆளுங்கட்சிக்கு எரிச்சல்...’’ என்று சொல்லி இழுத்தார் விக்கியானந்தா.
‘‘இழுக்காதீங்க, சப்ஜெட்டுக்கு வாங்க...’’
இதுல முக்கியமான சப்ெஜக்ட் என்ன தெரியுமா... முக்கொம்பு தவிர மற்ற பிரச்னைகளை கையில் எடுத்து தமிழக அரசை ஆட்டி படைப்பது மத்திய அரசுதான்னு அதிமுக வட்டாரத்துல பலமா உலாவுது... ஜெயலலிதா இருந்தபோது நரி போல பதுங்கியிருந்த மத்திய அரசு இப்போ தன் ஆட்டத்தை காட்ட ஆரம்பிச்சு இருக்கு... அதுக்கு மணி கட்டியே ஆக வேண்டும்னு நிறைய பேர் சேலத்துக்காரர், தர்மயுத்தக்காரருக்கு சொன்னாங்களாம்... அந்த நேரம் பார்த்துதான் 7 பேர் விடுதலை மேட்டர்ல செக்‌ஷன் 161 பயன்படுத்தி அவங்களை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டுன்னு தீர்ப்பு வெளிவந்துச்சு... தீர்ப்பு வெளிவந்த கையோடு சூட்டோடு சூடாக அமைச்சரவையை கூட்டி, அமைச்சரவை தீர்மானத்தை கிண்டிக்காரருக்கு அனுப்பி வைச்சாங்களாம்... இந்த விஷயத்துல விடுதலைனு முடிவெடுத்தா அதிமுக ஸ்கோர் பண்ணும்... மத்திய அரசுக்கும் பெரிய அளவுல பலன் இல்லாட்டியும் ஓரளவுக்கு பலன் இருக்கும்... அது அதிமுகவை விட பெரியதாக இருக்காது... அதை விட முக்கியமானது ராஜ்ஜிய உறவு... இலங்கை கூட இந்தியா ரொம்ப நெருக்கமாக இருக்கிற நாடு... அதனாலதான் தமிழக மீனவர்களை அடிச்சாலும் உதைச்சாலும், மீன்வளைகளை அறுத்தாலும் இந்தியா கண்டுகொள்வதே இல்லை.... நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களை சுட்டுக் கொன்றும் அதே அளவுக்கு படகுகளை பிடித்தும் இலங்கை அட்டகாசம் பண்ணாலும் இந்தியா சும்மாவே இருக்க முக்கிய காரணம்... இலங்கையை சீனா நெருங்க விடக் கூடாது... இப்போ இந்த 7 பேரை விடுதலை ெசய்தா அது இலங்கைக்கு கோபத்தை ஏற்படுத்தும்... இதுல நளினி, பேரறிவாளன் உள்பட சிலரின் பூர்வீகம் தமிழகமாக இருப்பதால இலங்கைக்கு பிரச்னை இல்ல... ஆனா முருகன், சாந்தன் உள்ளிட்டவங்களை விடுவித்தால்... விடுதலை புலி இயக்கம் மீண்டும் உயிர் பெறுதோ இல்லையோ... அது வெளிநாடுகளில் உள்ள அவர்களின் ஆதரவாளர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தும்... அது இலங்கைக்கு ேகாபத்தை ஏற்படுத்தும்னு இந்திய உள்துறை ரிப்போர்ட் சொல்லுதாம்... இதனால இது சர்வதேச பிரச்னையாக இருப்பதால கிண்டிக்காரர் தன் முடிவை எடுக்க குறைந்தது ஒரு வாரமாகலாம்னு கிண்டிக்காரர் வட்டாரத்துல பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அதிமுக இன்னும் உதறலோடுதான் இருக்காங்க போலிருக்கே...’’ என்று
‘‘ம்... அவங்களோட அதிகாரப்பூர்வ பத்திரிகையில கூட நேரடியாக சொல்லாம தாமரை கட்சியை வறுத்தெடுத்து இருக்காங்க... ஆனா பேட்டி அளித்த அமைச்சர்களோ, மத்திய அரசு பெட்ரோலுக்கு விதித்துள்ள வரியை குறைக்க வேண்டும் என்றுதான் பேசிக் கொண்டு இருக்காங்க... அவங்களுக்கு நேரடியா டெல்லியை எதிர்க்க தைரியம் இல்லாததைேய காட்டுகிறது என்று அவங்க கட்சிக்குள்ளேயே பேசிக்கிறாங்க.... டெல்லியில் உள்ள தம்பியானவரை பற்றிய மத்திய உளவுத் தகவல்கள் எல்லாம்... அவர் நம்பிக்கைக்கு உரிய நபர் இல்லை... அவரிடம் எந்த ரகசியமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்... அதுவாக இருந்தாலும் மாநிலத்தில் உள்ள மூன்றெழுத்துக்காரர்களை தொடர்பு கொண்டு கிளியர் செய்யவும்... நாம் பேசும் தகவல்கள் எல்லாம் சிறைப்பறவை தரப்புக்கு அப்படியே பாஸாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்... அந்த விரக்தியின் வெளிபாடுதான் தம்பியானவர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்... மேலும் தமிழக அரசும் பெட்ரோலுக்காக வரியை குறைக்கலாம்... பக்கத்து ஸ்டேட்ல குறைத்த மாதிரி நாமும் குறைத்தால் நல்ல பெயர் கிடைக்கும்னு ஐடியா கொடுத்து இருக்காங்களாம்... அதனால அறிவிப்பு விரைவில் வெளியே வரலாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குட்கா விஷயத்துல சிபிஐ முன் தமிழக காக்கிகள் விஷயத்தை கக்கிடும் போல இருக்கே...’’ என்றார் பீட்டர் மாமா.
 ‘‘தமிழக காக்கிகள் எவ்வளவு பேரை குடைஞ்சு எடுத்து இருப்பாங்க... என்னதான் சிபிஐயிடம் ஆதாரம் இருந்தாலும் புரோக்கர், உரிமையாளர்கள் மட்டும்தான் நேரடி சாட்சி... கோர்ட்டில் இந்த சாட்சிகள் பல்டியாடிக்கலாம்... அதனால சிபிஐ எத்தனை சம்மன் அனுப்பினாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாதே... சிபிஐ விசாரணைக்கு ஆஜராகு.... எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம்...ன்னு, எப்படி பதில் சொல்லணும்னு ஒரு டியூசனே எடுத்து இருக்காங்களாம்... சிபிஐ எந்த ஆவணத்தை வைத்து கேள்வி கேட்டாலும் அதற்கு தகுந்த பதிலை தமிழக காக்கிகள் வைச்சிருக்கும் அளவுக்கு ரெடி பண்ணி இருக்காங்களாம்... அதனாலதான் சேலத்துக்காரரும் எங்க மினிஸ்டர்ஸ் யார் தப்பு பண்ணி இருந்தாலும் பதவியில் இருந்து நீக்கிடுவேன்னு சவால் விட்டு இருக்கார்... இந்த சவாலுக்கு பின்னாடிதான்... காக்கிகளுக்கு எடுக்கப்பட்ட டியூசன் இருக்காம்... டியூசன் நன்றாக வேலை செய்தால் சிபிஐயின் கைகள் அதிகாரிகள் மட்டத்தோடு நின்றுவிடும்... அரசியலை தொட வாய்ப்புக் கூட கிடையாதுன்னு ஆளுங்கட்சி தரப்பு ெராம்பவே தைரியமாக இருக்காம்...’’ என்று சொல்லிவிட்டு மெரினாவில் இருந்து வீட்டுக்கு கிளம்பினார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்