SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கைவிரிப்பது சரியா?

2018-09-12@ 01:37:31

இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலை தினமும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. கச்சா எண்ணெய் விலை ஏற்ற, இறக்கத்துக்கு ஏற்ப, அவ்வப்போது விலை குறைப்பும் அமல்படுத்தப்பட்டது. ஆனால், சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க பைசாக்களில் 25 காசு, 40 காசு என தினமும் உயர்ந்து வருகிறது. பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் இப்பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று முன்தினம் நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆனால், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என மத்திய அரசு கைவிரித்து விட்டது.

``சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியை, அந்தந்த நாடுகள் குறைத்துள்ள காரணத்தாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்த காரணத்தாலும் பெட்ேரால், டீசல் விலை உயர்ந்துள்ளது, இந்த பிரச்னை விரைவில் தானாகவே சரியாகிவிடும்’’ எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த பிடிவாத போக்கு சாமானிய மக்களை கவலை அடைய செய்துள்ளது.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்  அளித்த தகவலின்படி, நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் டெல்லியில் ₹80.87, மும்பையில் ₹88.26, கொல்கத்தாவில் ₹83.75, சென்னையில் ₹84.07 என்ற அளவில் விற்பனையானது. டீசல் விலை டெல்லியில் ₹72.83, மும்பையில் ₹77.32, கொல்கத்தாவில் ₹75.68, சென்னையில் ₹77.13 என்ற அளவில் விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தை தொடுவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொண்டு, ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 4 சதவீதம் குறைத்துள்ளார். இதனால், அங்கு பெட்ரோல், டீசல் விலை 2.50 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதேபோல், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, லிட்டருக்கு 2 ரூபாய் வாட் வரி குறைத்துள்ளார். இருமாநிலங்களை தொடர்ந்து, தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை, தமிழக அரசு குறைக்கவேண்டும். மத்திய அரசு, பெட்ரோல் லிட்டருக்கு ₹19.48 மற்றும் டீசல் லிட்டருக்கு ₹15.33 என கலால் வரி விதித்து வருகிறது. மாநில அரசுகள் வாட் வரியை குறைப்பதுபோல் மத்திய அரசு கலால் வரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறையும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-02-2019

  19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்