SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜஸ்தான், ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைப்பு

2018-09-12@ 00:37:14

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.1 குறைக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை தினம், தினம் வரலாற்று உச்சத்தை அடைந்து வருவதை கண்டித்து நேற்று முன்தினம் நாடு தழுவிய அளவில் பந்த் நடத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநில அரசு வாட் வரியை குறைத்தது. பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50வீதம் குறைப்பதாக அம்மாநில அரசு அறிவித்தது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை சற்று குறையும். இதேபோல் ஆந்திராவிலும் பெட்ரோல், டீசல் மீதான விலையில் தலா ரூ.2 குறைத்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று மேற்குவங்க அரசும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு தலா ஒரு ரூபாயை குறைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “தற்போதைய சூழலுக்கு பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு தலா ஒரு ரூபாய் குறைக்கப்படுகின்றது. மத்திய அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பை குறைக்க வேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோதிலும் பாஜ தலைமையிலான மத்திய அரசு கலால் வரியை ஒன்பது முறை உயர்த்தியுள்ளது” என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-06-2019

    26-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்