SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி 20 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கைது: காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்

2018-09-12@ 00:09:07

கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 20 ஆண்டாக தலைமறைவாக இருந்தவரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். கோவை நகரில் கடந்த 14.2.1998 அன்று தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. 12 கி.மீ தூர சுற்றளவில் 18 இடத்தில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இதில் பொதுமக்கள் 58 பேர் இறந்தனர். 300 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கோவை மாநகர போலீசார், பாஷா, அன்சாரி உள்பட 157 பேரை கைது செய்தனர். இக்குண்டு வெடிப்பு வழக்கில், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் திருவண்ணு அருகேயுள்ள பன்னியான்கராவை சேர்ந்த என்.பி.அலி என்பவரது மகன் நூகு என்கிற ரசீத் என்ற மாங்காவு ரஷீத் (44) என்பவருக்கும் தொடர்பு இருந்தது. இவரை, கோர்ட் மூலமாக தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர்.

இவரது போட்டோ, முகவரி உள்ளிட்ட விவரங்கள் சர்வதேச விமான நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவரை சி.பி.சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி) போலீசார் தேடி வந்தனர். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் குடியுரிமை பிரிவு அதிகாரிகளின் சோதனையில் சிக்கினார். இவர், எஸ்.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவர் மீது 15 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று மதியம் கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் (எண் 5) அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி இனியா கருணாகரன், வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன்பின், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக இவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

ேகாவை மத்திய சிறையில், குண்டுவெடிப்பு கைதிகளுக்கான தனிப்பிரிவில் ரஷீத் அடைக்கப்பட்டுள்ளார். கோவை குண்டுவெடிப்புக்கு பிறகு இவர், கத்தார் நாட்டிற்கு சென்றுவிட்டார். 20 ஆண்டாக அங்கு தங்கியிருந்த அவர், சொந்த ஊருக்கு வந்து, உறவினர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார். தனது அடையாளம் மாறிப்போயிருக்கும், யாருக்கும் சந்தேகம் வராது என நினைத்து, சென்னை விமான நிலையம் வந்தபோது சிக்கிக்கொண்டார். கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷீத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக கோர்ட்டில் விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • LuklaAirportNepal

  சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபால விமான நிலையம்!

 • ParliamentAttaCK17

  நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

 • effiltowergunfire

  ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு ஸ்ரார்ஸ்பேர்க் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

 • FirstSnowFallShimla

  குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவை பெற்றுள்ள சிம்லா நகரம்...: இயற்கையின் மகிமையை பறைசாற்றும் புகைப்படங்கள்

 • natioanalmemeoryday

  நாஞ்சிங் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் சீனாவில் தேசிய நினைவு தினம் அனுசரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்