SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அன்பென்னும் அருமருந்து

2018-09-11@ 00:59:12

கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை, வட்டிக் கொடுமையால் குடும்பத்துடன் தொழிலதிபர் தற்கொலை, கள்ளக்காதல் எதிரொலியால் பெண் தற்கொலை, தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை என்ற செய்திகள் இல்லாத நாளே இல்லை. நாளுக்கு நாள் பெருகி வரும் தற்கொலையால் ஏற்படும் இழப்புகளால் எண்ணற்ற குடும்பங்கள் சிதறிப் போகின்றன.இதன் காரணமாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும்  8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக  உலக  சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதில் 15 முதல் 29 வயது உடையவர்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவிக்கிறது.
சமீபத்தில் சென்னையில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ‘‘இந்தியாவிலேயே புதுச்சேரி, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் தான் அதிக தற்கொலைகள் நடைபெறுகிறது,’’ என்ற  தகவலை வெளியிட்டார். சமூகம், அரசியல், மதம், சாதி, குடிப்பழக்கம், கூடாநட்பு,  உடல்நலக்கேடு, பொருளாதாரச் சிக்கல் ஆகியவற்றினால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக பெருமளவு தற்கொலைகள் நடக்கின்றன.

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டவர்களில் அதிகம் மாணவர்கள் என்பது அதிர வைக்கும் செய்தி. 2014 முதல் 2016 வரை இரண்டு ஆண்டுகளில் மட்டும் 26 ஆயிரத்து 500 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் மகாராஷ்டிரா, தமிழகத்தில் தான் அதிக அளவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று மத்திய குற்றவியல் ஆவணக்காப்பகம் தெரிவித்துள்ளது.குறிப்பாக, மாணவர்கள் மத்தியில் நடக்கும் தற்கொலைகளுக்கு மன அழுத்தம், கல்விச் சூழல், குடும்பப் பிரச்னை, போட்டி, சாதி, சமூக ஏற்றத்தாழ்வு உள்ளிட்டவை காரணமாக உள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா, தமிழகத்தை சேர்ந்த மாணவி அனிதா ஆகியோரின் தற்கொலை மரணங்கள் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தின.

மாணவர்களின் விருப்பத்திற்கு உகந்ததாக கல்வி நிலைய வளாகங்கள் மற்றும் கல்விச்சூழல் இல்லையென்பதை தான் இந்தியாவில் நடக்கும்  மாணவர் தற்கொலைகள் இடித்துரைக்கின்றன. எனவே, ஏற்றத்தாழ்வற்ற கல்வியை அனைவரும் பெறுவதற்கான நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். அத்துடன் மாணவர்கள் மனநலனைப் பாதுகாக்க அனைத்து மாநிலங்களிலும் மனநல திட்டங்களை கட்டாயம்  அமல்படுத்த வேண்டும்.எத்தகைய நெருக்கடி மிகுந்த மனிதர்களின் மனநிலையையும் மாற்றிட சில அன்புமிக்க சொற்கள் போதுமானதாகும். அவை தற்கொலை மனநிலையை மறக்கடிக்கச் செய்யும் மகத்தான அருமருந்தாகும். அந்த மருந்து எல்லோரிடமும் இருக்கிறது. அதன் மூலம் தற்கொலை இல்லாத உலகம் அமைக்க முடியும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-09-2018

  19-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • modi68bday

  வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

 • losangeleswaterlight

  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

 • vinayagarsilai

  சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

 • mankutstromchina

  தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்