SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

குட்கா புகழ் மாதவராவை சிறைப்பறவை ரகசிய இடத்தில் சந்தித்த விஷயத்தை சொல்கிறார் wikiயானந்தா

2018-09-11@ 00:32:38

‘‘என்ன விக்கி மால்ல என்ன வாங்க வந்து இருக்க...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘பாரத் பந்துக்கு பின்னாடி பல அரசியல் ஓடினாலும் எனக்கு கிடைத்த ஒரு தகவலை சொல்றேன் கேளு... காங்கிரஸ் பாரத் பந்த் நடத்த திட்டமிட்டிருந்த நாள்... காங்கிரசுக்கு பதிலடி கொடுக்க யோசிச்ச மத்திய அரசு பினாமி அரசை பயன்படுத்தி 7 பேர் விடுதலையை முதல் அமாவாசையன்று தீர்மானமாக போட ைவத்துள்ளதாம்... இதனால காங்கிரஸ் கட்சி படு அப்செட்டாம்... நாம ஒன்றை அறிவித்தால் அவர்கள் வேறு ஒன்றை அறிவித்து பரபரப்பு ஆக்கிடறாங்க... எப்டி இருந்தாலும் அதை ஏற்க முடியாதுன்னு காங்கிரஸ் தலைவர் அரசர் கண்டனம் தெரிவிச்சு இருக்காரு... அமாவாசை நாளில் எடுத்த முடிவு ஆளுங்கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை மாத்திடும்னு நினைச்சுதான் செப்டம்பர் 9ம் தேதியை அமைச்சரவையை கூட்ட தேர்வு செய்தாங்க... உளவுத்துறை நினைத்த மாதிரியே... தமிழ்நாட்டுல பந்தால மக்களின் இயல்புநிலை எந்த அளவுக்கும் பாதிக்கலையாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘போயஸ்கார்டன்ல இருந்தபோதே சிறைப்பறவை அடிக்கடி தனியாக ெவளிேய போய் வருவாராமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அக்கா உங்களுக்காக கோயிலுக்கு போறேன்... அக்கா உங்களுக்காக ஷாப்பிங் போறேன்னு சொல்லிட்டு உளவுத்துறை மற்றும் உயர் மட்டத்தில் தனக்கு நெருக்கமாக இருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மூலம் அன்றாடம் ஆட்சியில் நடைபெறும் நிகழ்வுகளை தெரிந்து கொள்வாராம்.
..
உறவினர் என்ற முறையில் மன்னார்குடி சொந்தங்கள் கொடுக்கும் பெட்டிஷன்களை வாங்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து அந்த வேலையை முடிக்க சொல்வாராம்... கட்சி பெயரை பயன்படுத்தி அதிகளவில் பணம் சேர்த்தவர் பற்றி தெரிந்தால் அவரை ஹவுஸ் அரெஸ்ட் செய்து 70 சதவீதம் பணம், நகை மற்றும் நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டு துரத்தி விடுவாங்களாம்... அதுமட்டுமில்லாமல் சில அமைச்சர்களும் மாதாமாதம் மாமூல் கட்டிக் கொண்டு இருந்தாங்களாம்...

அது எல்லாம் அப்படியே சேப்டியாக மத்திய, மாநில உளவுத்துறை, அமலாக்கத்துறைக்கு தெரியாத நபர்கள் மூலம் எல்லா பரிமாற்றமும் நடக்குமாம்... செல்போனில் கூட சங்கேத பாஷைகள் மூலம்தான் பணபரிவர்த்தனை நடக்குமாம்... அந்த பணம், சொத்து குறித்தும் தனி வழக்காக பிரித்து சிபிஐ விசாரிக்கும் திட்டம் இருப்பதாக சொல்றாங்க... இன்னொரு விஷயம் சிறைப்பறவையை நேரடியாக பார்த்து பேசியவர்களில் மாதவராவும் ஒருவர் என்கிற ேமட்டர் இப்பேது கசிந்து இருக்கு...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அரசியலை ஒதுக்கிட்டு சிபிஐ விசாரணை நடக்குமா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இப்போதைக்கு கிண்டிக்காரரின் முன் உள்ள ஒரே சவால் 7 பேரின் விடுதலை மட்டுமே... குட்கா விவகாரத்தில் எல்லா அசைவுகளும் டெல்லி டூ கிண்டி என்று நடந்து வருது... இதனால கிண்டிக்காரர் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கே என்ன நடக்குது என்று தெரியாதாம்... கிண்டிக்காரரின் சிறப்பு அதிகாரியான ஐஏஎஸ் எல்லாவற்றையும் நேரடியாக டீல் செய்வதால், ஆட்சியில் இருந்தாலும் பல விஷயங்களை தமிழக உளவுத்துறையின் பார்வைக்கே வராமல் நேரடியாக டீல் செய்யப்படுவதால், தமிழக அரசும் திணறி வருகிறதாம்... அரசியல் கைதுகள் இருக்கும்னு உறுதியாக சொல்லலாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘திருப்பரங்குன்றத்துல என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அலுவலகத்தில் பகவான் கிருஷ்ணின் மறுபெயர் கொண்ட அலுவலர் ஒருத்தர் இருக்காராம்... பகவான் கூட எளிதில் பக்தர்களிடம் அருள் பாலிப்பார்... இவர் தன்னை பகவானுக்கு மேல் நினைச்சுகிட்டு இருக்கார்... இப்போது இவர் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள், நிலங்கள், இடங்கள் உள்ளிட்டவற்றை பராமரித்து அதற்கான நீதிமன்ற பணிகளை செய்து வர்றாராம்...

கோயிலுக்கு சொந்தமான தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள ஒரு சில சொத்துக்களை, குறிப்பாக நீதிமன்றமே சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தம் என தீர்ப்பு வழங்கிய பின்பும் ஆக்கிரமிப்பாளர்களிடம் கமிஷன் பெற்று கொண்டு எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்...

எல்லாம் மாமூல்தான் காரணமாம்... இவருக்கு அமைச்சர் வரை செல்வாக்கு உள்ளதாம். முதல் படை வீட்டில் யார் துணை ஆணையராக வர வேண்டும் என்பதை கூட முடிவு செய்யும் அளவிற்கு இவருக்கு செல்வாக்கு இருப்பதாக கோயில் வட்டாரங்கள் குறிப்பாக கோயிலில் சேவை செய்யும் சில முக்கிய புள்ளிகளே சொல்லி வருத்தப்படுகிறார்கள்...’’ என்று சொல்லிவிட்டு பர்சேஸ் செய்ய கிளம்பினார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jawa_studentelection123

  ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

 • thirupathisixbrammorcha

  திருப்பதியில் 6வது நாள் பிரம்மோற்சவம் கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

 • german_trainhydro

  ஜெர்மனியில் சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் - பயணிகள் உற்சாக வரவேற்பு.!

 • spain_hotelaccident123

  ஸ்பெயினில் நட்சத்திர ஹோட்டல் கட்டுமானப் பணியின் போது விபத்து - ஒருவர் பலி

 • 19-09-2018

  19-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்