SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா இன்று முதல் மிகப்பெரிய போர் பயிற்சி

2018-09-11@ 00:10:18

மாஸ்கோ: உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா இன்று முதல் மிகப்பெரிய போர் பயிற்சி மேற்கொள்கிறது. இதில் 3 லட்சம் வீரர்கள், 36 ஆயிரம் ராணுவ வாகனங்கள், 1000 விமானங்கள், 80 போர் கப்பல்கள் பங்கேற்கின்றன. ரஷ்யா ஆண்டுதோறும் போர் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு மிகபிரமாண்டமான அளவில் உலக வராலற்றில் இல்லாத அளவுக்கு மேற்கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இந்த போர் பயிற்சி இன்று ெதாடங்குகிறது. இதில் சீனா மற்றும் மங்கோலியா ராணுவ படைகளும் மிகச்சிறிய அளவில் கலந்து ெகாள்கின்றன. சுமார் ஒரு வாரம் நடைபெற உள்ள இந்த பயிற்சி வோஸ்டாக் 2018 (கிழக்கு 2018) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த போர் பயிற்சியில் ரஷ்யாவில் இருந்து மட்டும் 3 லட்சம் வீரர்கள், 36 ஆயிரம் ராணுவ வாகனங்கள், 1000 விமானங்கள், 80 போர் கப்பல்கள் கலந்து ெகாள்கின்றன.

இந்த நேரத்தில் ரஷ்யாவில் நடைபெறும் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் அங்கு சென்றுள்ளார். பொருளாதார மாநாட்டை தொடங்கி வைத்த பின் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இந்த போர் பயிற்சியை இணைந்து தொடங்கி வைப்பார்கள் என்று தெரிகிறது. இதுபற்றி ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்ஜி சோஜ்ஜியு கூறுகையில், ‘‘ரஷ்ய வராலற்றில் 1981ல் சோவியத் ரஷ்யாவாக இருக்கும்போது 1 முதல் 1.5 லட்சம் வீரர்கள் பங்கேற்ற சபாத் 81 என்ற போர் பயிற்சி நடந்தது. அதன்பின் தற்போது மிகப்பெரிய அளவில் 3 லட்சம் வீரர்கள் பங்கேற்கும் போர் பயிற்சி நடக்கிறது. 36 ஆயிரம் ராணுவ வாகனங்கள் ஒரே நேரத்தில் இயங்குவதை நினைத்து பாருங்கள். மிகபிரமாண்ட அளவில் இருக்கும். இதில் அணுஆயுதங்களை சுமந்து செல்லும் இஸ்கந்தர் ஏவுகணை, டி80, டி90 பீரங்கிகள், எஸ்யு 34, எஸ்யு 35 போர் விமானங்கள் இதில் இடம் பெறும்’’ என்றார்.

உக்ரைன் மற்றும் சிரியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே சமீபகாலமாக உறவு சீர்குலைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மிகப்பிரமாண்ட முறையில் சீனா மற்றும் மங்கோலியா படைகளை இணைந்து ரஷ்யா போர் பயிற்சி மேற்கொள்வது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காதான் எதிரி
போர் பயிற்சி குறித்து ரஷ்யாவின் ராணுவ ஆராய்ச்சியாளர் பாவல் பெல்ஜென்ஹாவர் கூறுகையில், ‘‘இந்த போர் பயிற்சி நிச்சயம் அடுத்த உலக போருக்கு தயாராவது போன்றதுதான். 2020க்குப்பின் உலக போர் ஏற்படும் சூழல் உருவானால் இந்த பயிற்சி பயன்படும் என்று ராணுவ தளபதிகள் நினைக்கிறார்கள். இல்லாவிட்டால் அடுத்தடுத்து நடைபெறும் சிறு மோதல்களுக்கு பயன்படும்.
எங்களது எதிரி அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும்தான். இந்த பயிற்சி எச்சரிக்கையோ அல்லது தகவலோ அல்ல. மிகப்பெரிய போருக்கு தயாராகும் நடவடிக்கை தான். நேட்டோ நாடுகள் இதனால் பயப்பட வேண்டாம். இந்த பயிற்சி அந்த நாடுகளை விட மிகப்பெரிய தொலைவில் நடக்கிறது’’ என்றார்.

* ரஷ்யா போர் பயிற்சி 2014ல் நடந்த போது 1.55 லட்சம் போர் வீரர்கள் பங்கேற்றார்கள்.
* 2017ல் 12,700 வீரர்கள் மட்டுமே பங்கேற்றதாக ரஷ்யா கூறியது. ஆனால் உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் எண்ணிக்கை அதிகம் என்று கூறியது.
* இன்று தொடங்கும் போர் பயிற்சியில் சீன தரப்பில் 3,200 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
* இந்த மாதம் 2,200 உக்ரைனியன், அமெரிக்கர்கள் மற்றும் நேட்டோ வீரர்கள் மேற்கு உக்ரைனின் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • newyork

  நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

 • singaporebirds

  சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

 • turkey

  துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

 • climate

  ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

 • 25-06-2019

  25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்