SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போக்குவரத்து நெரிசலை குறைக்க விமான டாக்சி சேவை...... பிரிட்டனில் விரைவில் அறிமுகம்

2018-09-10@ 17:46:48

லண்டன்: காருக்கு பதிலாக வானில் பறக்கும் விமான டாக்சி சேவை பிரிட்டனில் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த விமான டாக்சி அமையும் என்பதால் எதிர்காலத்தில் இதன் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் எரிபொருள் தேவையை குறைக்கும் வகையிலும் பல்வேறு விதமான வானங்களை உலக நாடுகள் தயாரித்து வருகின்றன.

இந்நிலையில் பெட்ரோல், டீசலால் ஏற்படும் மாசை குறைக்கும் வகையிலான வாகன தயாரிப்புக்கு பல்வேறு நிறுவனங்கள் முன்னுரிமை அளித்து வருகின்றன. அந்த வகையில் எலெக்ட்ரிக் பைக்குகள் முதல் கார்கள் வரை சந்தையில் புதிது புதிதாக அறிமுகமாகி வருகின்றன. இந்த சூழலில் நகரமயமாக்களின் விரிசலில் இருந்து மக்கள் தப்பித்து கொள்ளவும், விரைவாக விரும்பும் இடத்துக்கு சென்று சேரவும் விமான டாக்சி சேவை பிரிட்டனில் அறிமுகமாக உள்ளது.  அதன்படி அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்த சேவை அமலுக்கு வர உள்ளது.

குறிப்பாக குறுகிய தூரங்களில் உள்ள பகுதிகளுக்கு செல்ல விமான டாக்சி சேவை பயன்படுத்தப்பட உள்ளது. காரை போன்ற வடிவத்தை கொண்ட இந்த டாக்சியில் ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்ய முடியும். ஆரம்பத்தில் தாழ்வான உயரத்தில் இயக்கப்படும் என்று தெரிகிறது. மக்களிடையே கிடைக்கும் வரவேற்பை பொறுத்து நீண்ட தூரம் பயணிக்கும் டாக்சி சேவை விரிவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. டுரோன் மற்றும் குவாட் காப்டர் தொழில்நுட்பத்தில் இந்த டாக்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சிவில் ஏவியேஷன் அதிகாரிகளிடம் அனுமதி பெற தற்போது சோதனை செய்யப்பட்டது. ரேஸ் கார் வடிவத்தை அடிப்படையாக கொண்டு இந்த விமான டாக்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இருந்த இடத்தில் இருந்தே மேலே பறக்கும் இந்த விமானம் நகர்ப்புறங்களில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டாக்சியில் அதிகபட்சமாக 500 மைல் தூரத்திற்கு மட்டுமே செல்ல முடியும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் அமைந்துள்ள இத்தகைய கண்டுபிடிப்புகளால் எதிர்காலத்தில் சாலையில் போக்குவரத்து நெரிசல்கள் குறையும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

 • NagaiGajaStorm

  நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

 • kajarainhome

  புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

 • sriramayanatrain

  புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்