SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ: கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறல்

2018-09-10@ 12:52:14

கலிபோர்னியா: அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர். வடக்கு கலிபோர்னியா வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 40,500 ஏக்கர் பரப்பளவிலான தாவரங்கள் எரிந்து சாம்பலாயின. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதியில் வசித்து வந்த மக்களை உடனடியாக அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக அருகில் உள்ள சாக்கிராமண்டோ நதியில் இருந்து நீரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் காற்றின் வேகத்தினால் தீ பரவும் வேகமும் அதிகமாக இருக்கிறது. எனவே தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு படையினர் திணறி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்