SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைச்சரவை தீர்மானம் மூலம் தாமரை கட்சியின் வேகத்துக்கு செக் வைத்திருக்கும் அதிமுக முடிவை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2018-09-10@ 02:28:05

‘‘என்னத்த ஃப்ரிஜ்ல இருந்து கூலா எடுக்கிறீங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அதை அப்புறம் சொல்றேன், இப்போ ஹாட் மேட்டர். தமிழக அமைச்சரவை கூட்டத்துல பூ கட்சிக்கு செக் வைத்த விஷயத்தை சொல்றேன் கேளு... சிபிஐ, ஐடி, இடி போன்ற துறைகளை கையில் வைத்து ரெய்டு என்ற பெயரில் தங்களை அசிங்கப்படுத்தும் பூ கட்சியின் வேகத்தை தடுக்க 7 பேர் விடுதலையை அமைச்சரவை கையில் எடுத்து இருக்கு... இப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழக அமைச்சரவை கூடி  7 பேர் விடுதலையை கிண்டிக்காரருக்கு பரிந்துரை செய்து இருக்காங்க...  இந்த பரிந்துரையை ஏற்காவிட்டாலும் ஏற்றாலும் பிரச்னை என்ற வகையில் இருதலைகொள்ளி எறும்பாக கிண்டிக்காரர் திணறிட்டு வர்றார்... இந்த விஷயத்துல தன் ஆட்டத்தை கிண்டிக்காரர் காட்டினால்... அதையே முன்னிறுத்தி தமிழர்களுக்கு எதிரானது தாமரை கட்சி... மீனவர்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை... ஸ்டெர்லைட் என்று தமிழர்களின் ஜீவாதாரத்தை நசுக்குதுன்னு பிரசாரம் செய்யும் திட்டமும் அதிமுக தரப்பில் இருக்காம்... 7 பேரின் விடுதலையை ஏற்று கிண்டிக்காரர் ஓகே சொன்னால் அவரது தலையும் தப்பிக்கும்... தமிழகத்தில் தாமரையும் தப்பிக்கும்... இல்லாட்டி தினமும் முற்றுகை போராட்டத்தை கிண்டி நோக்கி நடத்த சிறு சிறு கட்சிகளை ஆளுங்கட்சி இப்போதே தயார் செய்து வைச்சிருக்காம்... குட்கா பிரச்னையை திசை திருப்ப இந்த யுக்தியை அதிமுக பயன்படுத்தலாம்னு  நினைக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அதுமட்டும்தான் அமைச்சரவையில் முடிவு எடுத்தாங்களா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஆப்த ரெக்கார்டா சில விஷயங்களை பேசியிருக்காங்க... அதுல நொளம்பூர் ஐபிஎஸ் அதிகாரியை பற்றியதாம்... சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானம் ஆண்டி என்ற கதையாக... யாரை பிடித்து விசாரிக்கலாம்... யாரை கைது செய்யலாம்னு பல்வேறு துறைகள் யோசனை செய்து கொண்டிருக்கும்போது... எல்லோரையும் போட்டு கொடுத்தது மட்டுமில்லாம... அரசுக்கு தெரியும், நான் கடிதம் அனுப்பினேன்னு போட்டு விட்டதைதான் ஆளுங்கட்சிக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்காம்... அந்த அதிகாரி யாரையும் மதிக்கமாட்டார்... ரிடையர்ட் ஐபிஎஸ் அதிகாரிக்கு வழங்கும் சலுகையை திரும்ப பெறலாம்... அவர் ஆரம்பத்தில் இருந்தே சிறைப்பறவையோட ஆளு... இப்போது கூட ஆர்கேநகர்காரர் சொல்லித்தான் ஆளுங்கட்சிக்கு ஆப்பு வைச்சுட்டாரு... அந்த ரிடையர்டு ஐபிஎஸ்சை சும்மா விடக்கூடாதுன்னு அமைச்சர்கள் சிலர் கொந்தளிச்சாங்களாம்... இன்னும் சிலரோ, அவர் பணிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து எங்கே குவிச்சு வைச்சு இருக்காரு அதை தோண்டச் சொல்லலாம்னு சிலர் யோசனை சொன்னாங்களாம்... எல்லாவற்றையும் கேட்ட சேலத்துக்காரர், இப்போ நாம என்ன செய்தாலும் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கல் நடவடிக்கைனு பிரச்னை திசை திரும்பும்... அதனால அமைதியாக இருப்போம்னு சொல்லி ஆவேசப்பட்டவர்களின் கோபத்தை குறைத்தாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குட்கா விஷயத்துல நொளம்பூர்காரருக்கு எதிராக குரல் கொடுத்த அமைச்சர் பத்தி சொல்லுங்க...’’‘‘குட்கா விஷயத்துல அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக தமிழக அமைச்சரவையில் இருக்கிறவங்க யாருமே குரல் கொடுக்கல... ஆனா தன் மாவட்டத்தில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரியான ஜெயக்குமாருக்கு அமைச்சர் சண்முகம் குரல் ெகாடுத்தது அரசியல் வட்டாரத்தில் மட்டுமில்ல ஐபிஎஸ், ஐஏஎஸ் வட்டாரத்தில் பரபரப்பா பேசறாங்க... தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஆராயி வழக்கை விரைந்து குற்றவாளியை பிடித்தல், மற்றும் பல பரபரப்பான பிரச்னைகளை சுமுகமாக தீர்த்து அமைதியை உருவாக்கி ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாமல் பாதுகாத்ததாக எஸ்பிக்கு இந்த பாராட்டு தெரிவித்ததாக அமைச்சர் ஆதரவாளர்கள் சொல்லி சந்தோஷப்படறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.  

‘‘குட்கா வழக்குல யார் அப்ரூவரா மாறுவாங்கனு நினைக்கிறீங்க...’’என்றார் பீட்டர் மாமா. ‘‘ஏற்கனவே ரெண்டு ேபர் அப்ரூவரா மாறிட்டாங்க... இப்போது கட்டாயப்படுத்தி ரிடையர்டு ஆன போலீஸ் அதிகாரியை சிபிஐ டீம் ரகசியமாக விசாரிச்சு... என்ன நடந்ததுன்னு தெரிஞ்சு... அவரையும் அப்ரூவரா இல்லாம சாட்சியாக மாற்ற முடிவு செய்து இருக்காங்களாம்... காரணம் குட்கா விஷயத்தில் முதலில் பலியானவர் இவர்தான்... அப்புறம் அரசு ஆவணங்களை ஆட்சி, பொறுப்பு என்று எதுவும் இல்லாத சிறைப்பறவை வைத்திருந்தது ஏன்... சட்டப்படி ரகசிய ஆவணங்களை பொதுநபர்கள் வைத்திருப்பது குற்றம்... அதை வைத்து பணம் பார்த்தது பெரிய குற்றம் என்பதால், மாதவராவ் வரிசையில் சிறைப்பறவையும் சேர்க்க வாய்ப்பு இருப்பதாக சொல்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘‘அருப்புக்கோட்டையில என்ன விசேஷம்... ’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ அருப்புக்கோட்டை பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகத்துல ‘கரன்சி’ காட்டினால் உடனடி பத்திரப் பதிவு நடக்குமாம்.. இப்ப ரொம்ப கெடுபிடியாய் இருக்காம்... கடந்த ஒரு மாதமாக, புதிதாக வந்துள்ள அதிகாரி ஒவ்வொரு பத்திரத்திற்கும் ஒரு தொகையை மாமூலாக நிர்ணயம் செய்து வாய்மொழியாக இடைத்தரகர்களுக்கு சொல்லிட்டாராம்... சாதாரண பத்திரம்னா ஒரு கோடி மதிப்பிலான நிலப்பத்திரங்களை பதிவு செய்ய ரூ.1 லட்சம், உயிலுக்கு ரூ.10 ஆயிரம், பாகப்பிரிவினை, சீர்திருத்த பத்திரங்கள் சொத்து மதிப்பை பொறுத்து ரூ.10 ஆயிரம் வரை, பத்திர மதிப்பீட்டிற்கு ₹5 ஆயிரம் என மாமூலை அச்சிட்டு அறிவிக்காத குறையாக அறிவிச்சுருக்காராம்... தினமும் பாக்கெட்ல பல்லாயிரம் பணத்தோடுதான் வீட்டுக்கு செல்கிறாராம்... அறிவிச்ச மாதிரி தொகையை தரலைன்னா, பத்திரப்பதிவு பண்ண விடாம திருப்பி அனுப்பிடுவாராம்... பாவம் எத்தனை பேர் லஞ்சம் வாங்கி சிறைக்கு போனதை அந்த அதிகாரிக்கு இன்னும் ஞாபகம் வரவில்லை போலிருக்கே...’’ என்று கலாய்த்துவிட்டு ஃப்ரிட்ஜில இருந்து கூல்டிரிங்ஸ் எடுத்தார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 01-06-2020

  01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்