SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிரந்தர தீர்வு எப்போது?

2018-09-09@ 01:11:13

முக்கொம்பில்  பாறாங்கற்களால் ஏற்படுத்தப்பட்ட தடுப்பு வழியாக நீர் செல்லும் கசிவை  தடுக்க வைக்கோல், கரும்பு தோகை, வாைழ சக்கை கொண்டு அடைக்கப்பட்டு வருகிறது.  கொள்ளிடம் அணையில் கடந்த 22ம் தேதி  9 மதகுகள் தண்ணீரில் அடித்து  செல்லப்பட்டன. இந்த உடைப்பை அடைக்க தற்காலிக பணிகளில் கடந்த 15  நாட்களாக  600 தொழிலாளர்கள், இரவு பகலாக  ஈடுபட்டனர். சுமார் 3 லட்சம் மணல் மூட்டைகள், பெரும் பாறாங்கற்கள்   பயன்படுத்தப்பட்டு, சீரமைப்பு  பணிகள் நிறைவு பெற்றன. இருந்தும்   பாறைகளின் இடையே தண்ணீர் கசிந்து ஓடிக்கொண்டிருப்பதால் ைவக்கோல், கரும்பு  சக்கை, வாழை சக்கையை பயன்படுத்தி தண்ணீர் கசிவை நிறுத்தும் முயற்சியில்  பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளது. என்னதான் இதுபோன்ற தற்காலிக பணிகளை மேற்கொண்டாலும் கொள்ளிடத்திலிருந்து   20 சதவீதம் தண்ணீர் வெளியேறுவதை தடுக்க முடியாது. இந்நிலையில் மணல்  மூட்டைகள் நீரில் சரிந்து 10 அடிக்கு தண்ணீரில் சரிந்து மூழ்கியது.  இதற்கிடையில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு  வினாடிக்கு 12,500 கனஅடி திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர்   முக்கொம்பு வந்து சேர்ந்தால் தண்ணீர் மேலும் அதிக அளவு கொள்ளிடத்திலிருந்து வெளியேறும் அபாயம் உள்ளது.

மண்ணச்சநல்லூர் தாலுகாவில் 200 கிராமங்களில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி தொடங்க உள்ளனர். இந்த கிராமத்து விவசாயிகள் முக்கொம்பில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் மதகுகள் உடைப்பை சீர்செய்வதில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டு வருவதால் தண்ணீர் திறப்பது தாமதமாகி வருகிறது. மதகுகள் உடைப்பை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டால் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். ஆனால் மணல் மூட்டைகள் போட்டும், வாழை சக்கை, கரும்பு சக்கை என்று பல்வேறு வழிகளில் உடைப்பை அடைக்கும் பணி மேற்கொண்டாலும், தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் கசிவை முழுவதுமாக நிறுத்துவது எளிய காரியமாக தெரியவில்லை. எனவே தமிழக அரசு விரைந்து செயல்பட்டு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி சம்பா சாகுபடி பொய்க்காமல் காக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்