SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நொளம்பூர் ஐபிஎஸ் அதிகாரி திடீரென பிரஸ்மீட் கொடுத்த பின்னணி தகவல்களை சொல்கிறார் wikiயானந்தா

2018-09-09@ 00:41:02

‘‘என்ன நொளம்பூர் ஐபிஎஸ் அதிகாரி பேட்டியின் பின்னணி தெரிந்ததா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘பின்னணி ரொம்ப சிம்பிள்... எந்த உயரதிகாரியும் பல லட்சங்களை நேரடியாக லஞ்சமாக வாங்குவது கிடையாது... இதற்காக சில பலியாடுகளை வைச்சிருப்பாங்க... அந்த பலியாடுகளையும் நிரந்தரமாக தங்கள் பக்கத்தில் வைச்சிருக்க மாட்டாங்க... அடிக்கடி மாத்திட்கிட்டே இருப்பாங்க... அதனால யார் மூலம் பணம் வந்ததுன்னு யாரும் அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாதாம்... அது தான் உயரதிகாரிகள் பிளஸ் பாயின்டா அமைந்துவிடுது...’’ என்று சொல்லி முடிக்கும் முன்பே, ‘‘விக்கி நான் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லு...’’ என்று எரிச்சலுடன் ேகட்டார் பீட்டர் மாமா.

‘‘கோபப்படாதே பீட்டர்.. சொல்றேன் கேளு... சர்வீசில் இருப்பவர் நேரடியாக பேட்டியளிக்க முடியாது என்பதாலும், பொலிட்டிக்கல் பிரஷர் காரணமாகவும் நொளம்பூரில் வசிக்கும் அதிகாரி நிருபர்களை சந்தித்து பேட்டியளித்து இருக்கிறார்... அவர் நோக்கம் ஒரு குறிப்பிட்ட அதிகாரியை குறி வைச்சு நடந்த பிரஸ்மீட்டாக பார்க்கிறார்களே தவிர... பெரிசா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை... அதே சமயம் தமிழகத்தில் உள்ள எல்லா ஐபிஎஸ் அதிகாரிகளும் அந்த முன்னாள் அதிகாரி மீது கடும் கோபத்தில் இருக்காங்களாம்... இவர் பேட்டியளித்த அன்றே சென்னையில் கூடிய சில ஐபிஎஸ் அதிகாரிகள், முன்னாள் அதிகாரியின் லீலைகளை அம்பலப்படுத்த முடிவு செய்து இருக்காங்களாம்... இவர் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும்... சிறைப்பறவையின் கண்பார்வையில் இருந்தவர்... சென்னை மற்றும் புறநகர்களில் முக்கியத்துவம் வாய்ந்த நிலம், வீடு, கடைகளை கட்டப்பஞ்சாயத்து செய்தும், மிரட்டியும் சிறைப்பறவை தரப்புக்கு வாங்கி கொடுத்துள்ளாராம்... இவர் அனுப்பும் அறிக்கைகள் சிறைப்பறவைக்கே முதலில் செல்லுமாம்... அதை பெற்ற உடனே சிறைப்பறவை தரப்பு கடிதம், பரிந்துரைகள், அறிக்கையை வைத்து டீல் பேசினால் எவ்வளவு கிடைக்கும்னு பேசுவாங்க... அதுவும் சிறைப்பறவையின் ரத்த சொந்தம் மூலமா இந்த டீலிங் நடக்குமாம்... அப்படி நடந்ததில் ஒன்றுதான் குட்கா ஊழல்... குற்றம் செய்வதை விட குற்றவாளிக்கு துணையாக இருப்பது அதைவிட பெரிய குற்றம் என்பது ஐபிஎஸ் படித்த அதிகாரிக்கு தெரியாதா என்ன... என்னதான் அவர் அப்ரூவராக மாறினாலும் அவரும் சிறைக்கு போவது உறுதின்னு சில ஐபிஎஸ் அதிகாரிகள் உறுதியாக நினைக்கிறாங்க... தமிழ்நாட்டை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள், பிற மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் நொளம்பூர் ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக திரும்பிட்டாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அரசியலை தவிர்த்தது ஏனாம்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘நான் முன்னாடியே சொன்ன மாதிரி மாஜியை ஆளுங்கட்சி ஓரங்கட்டியாச்சு... இந்த நிலையில அரசியல்வாதியை பகைத்துக் கொண்டால் நம்மை யாருமே காப்பாற்ற மாட்டாங்க... குறிப்பா இவரது பேட்ஜ்மெட்டும், தற்போது பதவியில் இருப்பவரும் சும்மா விடமாட்டாங்கனு நொளம்பூர்காரருக்கு தெரியாதா என்ன...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாங்கனி மாவட்டத்துல என்ன ஓடிட்டு இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மாங்கனி மாவட்டத்துல, ஊரகத்துக்கான கல்வி ஆபீசர மாத்தணும்னு டீச்சருங்க போர்க்கொடி தூக்க போறாங்களாம். நேரடியாக போஸ்டிங்க்ல வந்த இளம் வயசு ஆபீசரு, முன்னாடி ஆசிரியர் தினம் அன்று ஏர்போர்ட் கிராமத்து பள்ளிகூடத்துக்கு விசிட் போனாராம்... வாத்தியாருங்க அட்டனென்ஸ் பாத்துட்டு, ஒரு டீச்சரும், வாத்தியாரும் ஒருவாரம் மெடிக்கல் லீவு போட்டத பத்தி கேட்டாராம். அவுங்க ஹார்ட் பிராப்ளத்துக்கு லீவு போட்டுருக்காங்கனு பதில் வந்தது தான் லேட்டு, ‘பள்ளிக்கூடத்த விட அவங்களுக்கு லீவு தான் முக்கியமா, இங்க இருந்தே செத்தா சாகட்டும்’’னு தடாலடியா பேசுனாராம். அதிகாரியோட இந்த வார்த்தைய கேட்டு பதறிபோனவங்க, என்ன செய்யறதுன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டாங்களாம். இப்போ, யாரையும் மதிக்காத அந்த அதிகாரிய மாத்தணும்னு, டீச்சருங்க கொடி புடிக்க தயாராகிட்டு வர்றாங்களாம்... அவங்க உயிரோடு இருந்தாதானே மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுக்க முடியும் என்று சொல்லி வருத்தப்பட்டார் விக்கியானந்தா.


‘‘கைது படலம் முடிஞ்சுடுச்சா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘குட்கா விஷயத்துல மட்டும் இல்ல... செய்யாதுரை விஷயத்துலேயும் பல்வேறு துறைகள் ரொம்பவே துடிப்பா இருக்காம்... இந்த கைது நடவடிக்கை எல்லாம் தமிழ்நாட்டுல நடந்தாலும் அண்டை மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்ட ரெட் சிக்னல்தான்னு எல்லோரும் பேசிக்கிறாங்க..’’என்றார் விக்கியானந்தா.

‘‘டிஜிபி நிலவரம் எப்பிடி இருக்கு..’’
 ‘‘டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீட்டில் சிபிஐ ரெய்டு அடித்ததும், இரவே முதல்வரைச் சந்தித்து ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தாராம். அப்போது உடன் இருந்த மற்றொரு போலீஸ் அதிகாரி, ராஜினாமா செய்ய வேண்டாம். பதவியில் இருந்தால், உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யவோ, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ, அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். நீங்கள் ராஜினாமா செய்தால், சாதாரண மனிதராகி விடுவீர்கள். எளிதாக சிபிஐ பிடியில் சிக்கிக் கொள்வீர்கள். அதனால் பேசாமல், பதவியில் நீடிப்பதுதான் உங்களுக்கு நல்லது என்று முதல்வர் வீட்டில் வைத்து ஐடியா கொடுத்தாராம். இதனால்தான், தனது ராஜினாமா முடிவை டிஜிபி கைவிட்டாராம்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-02-2019

  20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mallakamb_mumbai

  மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

 • varanasi_modi123

  டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

 • china_lamfesti1

  சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

 • 2mili_nall

  காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்