SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பார் கலெக்‌ஷனில் மேஜர் ஷேர் கேட்கும் எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா ‘‘பார் கலெக்‌ஷனில் மேஜர் ஷேர் கேட்டு அலும்பு பண்றாராமே ஒரு எம்எல்ஏ..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

2018-09-08@ 00:58:51

‘‘ஈரோட்டில் சூரியன் உதிக்கும் திசையை தொகுதியாக கொண்ட எம்எல்ஏ கமிஷன் வாங்கிறதுல கறாரா நடந்துக்கிறார்ன்னு கான்டிராக்டர்கள் எல்லாம் புலம்பிய நிலையில், இப்ப சொந்தக்கட்சிக்காரங்களே புலம்பற அளவுக்கு வளம், வளர்ச்சியை நோக்கி வேகமா போய்கிட்டு இருக்கிறாராம். தொகுதியில் 60 டாஸ்மாக் பார் இருக்கு. ஒவ்வொரு பார் ஓனரும் மாசம் 25 ஆயிரம் அந்தந்த பகுதியில இருக்கிற கட்சி நிர்வாகிங்கக்கிட்ட கப்பம் கட்டி வந்தாங்க. சமீப காலமா எம்எல்ஏ கிட்ட இருந்து பார்-காரங்களுக்கு ஒரு உத்தரவு வந்துச்சாம். இனிமே என்னிடம்தான் கப்பம் கட்டனும், நான் எல்லாருக்கும் சமமா பிரிச்சு கொடுக்கிறேன்னு சொல்லி மாசம் 12 எல் வரைக்கும் கலெக்க்ஷன் செய்றாராம். கலெக்க்ஷன் பணத்துல மேஜர் ஷேர் எம்எல்ஏ எடுத்துக்கிட்டு மிச்சம் மீதி இருக்கிறதை மட்டும் கவர்மென்ட் கெஸ்ட் ஹவுஸ்-க்கு வரச்சொல்லி, அல்லு, சில்லுகளுக்கு பட்டுவாடா செய்யறாராம். இதனால் டென்ஷன் ஆன கட்சி நிர்வாகிகள் சிலர், எல்லாத்தையும் நீங்களே வெச்சுகிட்டா நாங்க எங்க போறதுனு எம்எல்ஏ கிட்ட மல்லுக்கட்டிருக்காங்க. உடனே அவர், எத்தனை நாளைக்கு இந்த பதவில இருப்பேன்னு தெரியாது. நானும் வளர வேண்டாமானு எதிர்கேள்வி கேட்டாராம். பக்கத்துல இருக்கிற தொகுதி எம்எல்ஏ பார் விஷயத்துல தலையிடறதே இல்லை, கட்சிக்காரங்களே நேரடியா வாங்கி சத்தம் போடாம பிரிச்சு வெச்சுக்கிறாங்க. ஆனா, நீங்க மட்டும்தான் பார் வரைக்கும் இறங்கி அடிக்கிறீங்க என கமாண்ட் விட, எரிச்சலான எம்எல்ஏ., யோவ்...அடுத்த மாசத்துல இருந்து இதுவும் கிடையாது.... போய் யார வேனும்னாலும் பாரு என எச்சரித்து அனுப்பிவிட்டாராம்’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘துணை பிடிஓ ஒருத்தர் வசூல்வேட்டை நடத்திட்டிருக்காராமே...’’ என்று அடுத்த கேள்வியை தொடுத்தார் பீட்டர் மாமா. ‘‘ஓ.. அந்த விஷயமா.. சொல்றேன்.. வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம், பேரணாம்பட்டு, மாதனூர் என்று பெரும்பாலான ஒன்றியங்களில் யார் வந்து ஆய்வு செய்து முறைகேட்டை கண்டுபிடித்தாலும், எங்களது விளையாட்டை தடுக்க முடியாது என்ற ரீதியிலேயே அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பா மாதனூர் ஒன்றியத்தில் பணியாற்றி கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட பிடிஓக்கள் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.சமீபத்தில் இங்கு பணியாற்றிய தணிக்கை அலுவலர் தேசியமணி சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளானார். அவரது பணியிடத்தில் இன்னும் யாரும் நியமிக்கப்படாத நிலையில் அங்கு பணியாற்றி வரும் துணை பிடிஓ ஒருவர் தேசியமணி இடத்தில் பொறுப்பு அலுவலராக மட்டும் பணியை பார்த்துக் கொள்ள அதிகாரிகளை நன்கு கவனித்து பொறுப்பை பெற்றுக் கொண்டாராம்.தொடர்ந்து சில நாட்களிலேயே மாதனூரில் 18 ஊராட்சிகளுக்கும் விசிட் அடித்த துணை பிடிஓ ஒவ்வொரு ஊராட்சியிலும் ₹25 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை வசூல் செய்து கொண்டு நடக்காத பணிகளையும் நடந்ததாக காட்டப்பட்ட பைல்களில் தணிக்கை செய்யப்பட்டதாக கையெழுத்திட்டாராம்’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘மீன்வளத்துறை விவகாரம் இருக்குன்னு சொன்னியேப்பா..’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா. ‘‘வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை ஒருங்கிணைத்து காட்பாடி காந்தி நகரில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை தேடி அலைய வேண்டிய நிலையில்தான் இன்றும் உள்ளது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்ட உள்ளூர் மீன்பிடி தொழிலாளர்கள் நலத்திட்டங்களை அனுபவிக்க முடியாமல் திணறுகின்றனர். ஆனால், எல்லா நலத்திட்டங்களும் முறைப்படி சேர வேண்டியவர்களை சேர்ந்துவிட்டதாக ஆவணங்கள் தயாராகிவிட்டதாம்.இந்நிலையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்மலின் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய சென்றனர். அப்போது, ‘மீன்வளத்துறை அதிகாரிகள்தான் இங்கு ஆய்வு செய்ய வேண்டும். நீங்கள் எதற்காக வர்றீங்க’ அப்படின்னு கேள்வி எழுப்பி உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்களாம்.மேலும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு செய்ய வேண்டிய ‘பார்மாலிட்டிஸ்’ அனைத்தையும் ஒட்டுமொத்த வியாபாரிகளும் சேர்ந்து செய்துவிட்டோம். உங்களுக்கு தனியாக ‘பார்மாலிட்டிஸ்’ எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்.

மீன்வளத்துறை அதிகாரிகளின் தில்லாலங்கடி வேலையை தெரிஞ்சுகிட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், ‘மீன் இறைச்சி விற்பனையை ஆய்வு செய்ய மீன்வளத்துறை அதிகாரிகள் இருப்பதை மறந்துட்டோமேனு’ பேசிக்கிறாங்களாம்.இந்நிலையில், வேலூர் கோட்டை அகழியில் ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென செத்து மிதந்தன. இந்த அகழி மீன்வளத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு, மீன்கள் பிடித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தொல்லியல்துறை, மாநகராட்சி நிர்வாகம் என்று ஒட்டுமொத்த அதிகாரிகளின் ஆள்காட்டி விரல்களும் மீன்வளத்துறையை காட்டியது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீன்வளத்துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளார்களாம்.ஆனாலும் மீன்வளத்துறை அதிகாரிகள் எந்தவித கலக்கமும் இல்லாமல் இருக்கின்றனர். கடந்த கூட்டுறவு சங்க தேர்தலின்போது ஆளும்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர், மீன்வளத்துறை அதிகாரிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். தொடர்ந்து ஆளும்கட்சி பிரமுகரின் ஆதிக்கமும், ஆதரவும் மீன்வளத்துறையில் கொடிகட்டி பறப்பதே மீன்வளத்துறை அதிகாரிகளின் தைரியத்துக்கு காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-06-2019

  18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

 • pandacub

  உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்