SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குட்கா வழக்குல பழைய ஆபீசரை கை கழுவிவிட ஆளும்கட்சி முடிவு செய்து இருப்பதை சொல்கிறார் wiki யானந்தா

2018-09-07@ 02:12:16

‘‘டார்ச் லைட் எடுத்துட்டு ேபாய் என்ன கண்டுபிடிக்கப்போறீங்க...’’என்று கலாய்த்தார் பீட்டர் மாமா. ‘‘கலாய்க்கிறத விடு.. இதை கேளு.. ஆளும்கட்சியில் அனைவரும் கலங்கி போய் இருக்காங்க... டிஜிபி லெவல், அமைச்சர் லெவல்ல அரஸ்ட் நடப்பதற்கான சூழல் இருக்கும்போது யாருக்குதான் அதிர்ச்சி இருக்காது... நொளம்பூர் போலீஸ் அதிகாரியை பற்றி ஆளும்கட்சிக்கு கவலையில்லை... ஏன்னா அவர் பதவியில் இருக்கும்போதே யாருடனும் நல்ல தொடர்பில் இல்லையாம்... பதவி ேபாதையில் இருந்தாராம்... ஆனால் இப்போது பதவியில் இருப்பவங்க அதிர்ச்சியில இருக்காங்களாம்... அதிலேயும் இது தொடர்பாக சுப்ரீம்ேகார்ட்டில் வழக்கு போட்டவர் கூட அதிர்ச்சியில் இருக்கார்... சின்ன மீனை வைச்சு பெரிய மீனை பிடிப்பதுதான் சிபிஐ ஸ்டைல்... அதுல புரோக்கர்கள் நிறைய தகவல் சொன்னாங்களாம்... ஆனா அரசியல்வாதி, அதிகாரிகளை காட்டி கொடுக்க மறுத்து கீழ்மட்ட அதிகாரிகளின் பெயர்களை மட்டும் சொன்னாங்களாம்... இவங்க மூலம்தான் நாங்க பணம் கொடுத்தோம்... ஐபிஎஸ், அமைச்சரை நேரில் பார்க்கவும் இல்ல... அவங்களுக்கு என்று பணம் தரவும் இல்லை என்று சத்தியம் செய்தாங்களாம்... ஆனால் சிபிஐ தன்னிடம் உள்ள ஆவணங்களை காண்பித்து... இந்த பெயர் யாருடையது... இந்த பணம் யார் மூலம் சென்றது... என்று குடைந்துவிட்டார்களாம்... அதனால கைது இருக்கும்’’ என்றார் விக்கியனானந்தா.

‘‘மாங்கனி மாவட்டக்காரர் தலைைமயில தலைமை செயலகத்துல கூட்டம் நடந்துதாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ம், குட்கா விஷயத்துல கட்சிக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை போக்க என்ன செய்யலாம்னு முடிவு எடுத்து இருக்காங்களாம்... இப்போதைய டிஜிபியை நீக்கினா தப்பை ஒப்புக் கொண்டபடி ஆகும்... அதனால அவரை டம்மி போஸ்டிங்குக்கு மாத்திடலாம்... அமைச்சரை காப்பாற்ற டெல்லி மேலிடத்தில் பேசிடலாம்னு முடிவெடுத்தாங்களாம்... அப்போது ஒரு ஐஜி லெவல்ல இருக்கிற முக்கிய அதிகாரி, ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவித்தால் மக்கள் இதை மறந்துடுவாங்க அதனால சிறப்பு சட்டமன்றத்தை கூட்டியோ, அமைச்சரவையை கூட்டியோ அதன் முடிவை கவர்னருக்கு கொடுக்கலாம்... இதன்மூலம் தேர்தல்ல நமக்கு பெரிய பிளஸ் பாயின்ட்டுனு ஐடியா சொன்னாராம்... அதனால இந்த விஷயங்களில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக நடக்கும்னு சொல்றாங்க... அப்புறம் பூ கட்சிக்கும் தமிழகத்தில் காலூன்ற ஒரு சான்ஸ்... ஏற்கனவே பிஜேபியில இருந்தவர்தானே தற்போதைய கவர்னர்... அவர் மூலம் ரிலீஸ் செய்தால் அது பூ கட்சிக்கு பாதி கிரெடிட் கொடுக்கும் என்பதால் பூ கட்சி நிர்வாகிகளும் ரொம்பவே சந்தோஷத்தில் இருக்காங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குட்கா ஊழலின் முதல் குற்றவாளி யாரு தெரியுமா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இதுல என்ன சந்தேகம்... அந்த பகுதியில இருந்த இன்ஸ்பெக்டர்தான் முதல் குற்றவாளியாம்... இவர்தான் பணத்தை வாங்குவது, சம்பந்தப்பட்டவர்களுக்கு சேர்ப்பது என்று எல்லா காரியங்களையும் செய்தாராம்... போலீஸ் கமிஷனர் வாங்கிய பணத்தை விட இவர் வாங்கியதுதான் அதிகமாம்... ஆனால் கணக்கு மட்டும் அதிகாரிகளின் பெயரில் பெரிய தொகையை காட்டிவிட்டு சிறுெதாகையை அளிப்பாராம்... டிஜிபியின் பினாமி என்று முத்திரை குத்தப்பட்ட அந்த இன்ஸ்பெக்டர் சென்னையில் கேலோச்சி வந்தாராம். குட்கா விவகாரம் வெளியே வந்ததால் தமிழகத்தின் தென்கோடியான முத்து நகர் மாவட்டத்திற்கு பாதுகாப்பு கருதி மாத்தினாங்களாம்.. இதையும் மோப்பம் பிடித்த சிபிஐ டிஜிபி வீட்டில் ரெய்டுக்கு நுழைந்தது போல இன்ஸ்பெக்டர் வீட்டிலும் ஒரு தனி டீமை அனுப்பி சோதனை நடத்தியுள்ளது. கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் மேலாக இந்தச் சோதனை நடந்துள்ளது. சோதனையின் முடிவில் கட்டுக் கட்டாக ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளனர். அவரது மனைவி ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்தவராம். அவரது வீட்டிலும் குறிவைத்து சிபிஐ சோதனை நடத்தி ஆவணங்களை அள்ளி சென்றுள்ளார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கோவையில என்ன விசேஷம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கோவை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் 4 பேர் உள்ளனர். இவர்களில், ஒருவர் ஆளும்கட்சி முக்கிய புள்ளியுடன் கைகோர்த்து வசூல் வேட்டையை தட்டி எடுக்கிறார். கோவை மாவட்டத்தில் சமீபத்தில் 11 தாசில்தார்களுக்கு இடமாற்றம் உத்தரவு வழங்கப்பட்டது. அதற்கு காரணம் இவர்தான். தனக்கு வேண்டியவர்களுக்கு வேண்டிய போஸ்ட் கிடைக்க, நல்லா ரேட் பிக்ஸ் செய்து, அதற்கு தகுந்தாற்போல் டிரான்ஸ்பர் போட்டுள்ளார். மாவட்டத்தில் துப்பாக்கி லைசென்ஸ் வைத்துள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கலெக்டர் ஆபீசில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புதுப்பிக்க வேண்டும். ஆனா, இவரு, துப்பாக்கியுடன் வருவோரை மணிக்கணக்கில் காக்க வைக்கிறார்... `போய்ட்டு இன்னொரு நாள் வா...'' என இழுத்தடிக்கிறார். அதேநேரம், கொடுக்கிறத கொடுத்தா உடனே லைசென்ஸ் ரெனிவல் ஆகிவிடுகிறது. `இப்படி தொட்டதற்கெல்லாம் காசு பார்த்து விடுகிறார். காரணம், ஆளும்கட்சி முக்கிய புள்ளி ஆதரவு... இவங்களும் ஒரு நாள் கர்சீப் எடுத்து முகத்தை மூடும் நிலை வரும்போதுதான் அசிங்கம்னா என்ன என்று தெரியும்..’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-02-2019

  24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2019

  23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்